ஜூலை மாத ராசி பலன் 2022: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என பாடப்போவது யார் தெரியுமா?
நவகிரகங்களின் பயணத்தால் ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூலை மாதம் மழைகாலம்..பருவமழையால் பயிர்கள் செழிக்கும். இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சிம்மம்
ஜூலை மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் லாப வீட்டில் சூரியன், புதன்,பத்தாம் வீட்டில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு, எட்டாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கிரகங்களின் சஞ்சாரத்தினால் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நல்ல நேரம். தொழில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதிப்பிரச்சினை நீங்கும் பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பதவி உயர்வு தரும் சுக்கிரன்
பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சுக்கிரன் மாளவியா யோகத்தை தரப்போகிறார். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு அதிகரிக்கும். சுப காரியங்கள் அனைத்தும் தடைகள் நீங்கி நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொள்வீர்கள்.

கல்வியில் முன்னேற்றம்
சூரியன், புதன் பார்வையால் வெற்றிகள் கைகூடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். வெளியூர் பயணங்களால் வெற்றி உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான நேரம் கைகூடி வந்துள்ளது. வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் திடீர் மாற்றங்கள் உண்டாகும்.

தன்னம்பிக்கை கைகூடும்
உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனியின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. வெற்றிகள் கைகூடி வரும். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள். தொழில் வியாபாரங்களில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். புதிய காதல் உருவாகும். காதல் கைகூடி வரும். காதல் யோகங்கள் இருந்தாலும் சில தடைகள் ஏற்படும்.

ஆரோக்கியத்தில் கவனம்
கண்டச்சனி காலம் என்பதால் ஒருவித பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். நோய்கள் எட்டிப்பார்க்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். சவால்களை எதிர்கொள்வீர்கள். நாள் பட்ட நோய்கள் தொந்தரவு செய்யும். உணவு விசயத்தில் கவனம் தேவை. சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் நன்மைகள் அதிகரிக்கும். நோய்பாதிப்புகள் குறைய அனுமனை வணங்குங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications