ஜூலை மாத ராசி பலன் 2023: காணும் இடம் எங்கும் கண்ணி வெடி..கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!
சென்னை: ஆங்கில மாதத்தில் ஏழாவது மாதம் ஜூலை மாதம். நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. கும்பம் மற்றும் மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கும்பம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. உங்கள் ராசியிலேயே அமர்ந்து வக்ரம் பெற்று பயணம் செய்கிறார். ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, குரு, ஐந்தாம் வீட்டில் சூரியன் புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ஜூலை மாதத்தில் உங்கள் ராசியில் உள்ள சனியின் மீது செவ்வாய் சுக்கிரன் பார்வை விழுகிறது. குரு பகவான் மறைவு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண விசயங்களில் கவனம் தேவை. வேலையை அவசரப்பட்டு விட்டு விட்டு அவதிப்பட வேண்டாம். பிசினஸ் செய்பவர்கள் முதலீடுகளில் கவனம் தேவை. அதிக ரிஸ்க் எடுக்காதீர்கள்.
கவனம் தேவை: வாழ்க்கையே போர்க்களமாக இருக்கிறது. என்ன செய்வது அட்ஜஸ்ட் செய்து செல்வதுதான் நல்லது. சோதனையான காலகட்டம் என்பதால் கோவிலுக்கு சென்று வணங்குவது நல்லது. இல்லத்தரசிகள் இந்த கால கட்டத்தை பொறுமையோடு கடந்து செல்வது நல்லது. இரவு நேர பயணங்களில் கவனமும் நிதானமும் அவசியம். ஏழாம் வீட்டில் இருந்து சுக்கிரன் செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் யோகம். மாற்றம் வரும் போது கவனமாக கையாளுங்கள். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன சிக்கல்கள் வந்து போகும். புதிய குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண யோகம் கைகூடி வரும் என்றாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்லது. ஜூலை மாதத்தில் நிதானம் பொறுமையும் அவசியம் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே 12ஆம் வீட்டில் சனி, இரண்டாம் வீட்டில் குரு,ராகு, நான்காம் வீட்டில் சூரியன், புதன், ஆறாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் எட்டாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் பயணம் செய்வதால் உங்கள் ராசிக்கு ஜூலை மாதத்தில் கவனத்தோடும் நிதானத்தோடும் நடந்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனத்தோடு இருப்பது அவசியம். இது வேலை மாற்றத்திற்கான ஏற்ற காலம் இல்லை. எனவே இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விட வேண்டாம். வரவை விட செலவுகள் அதிகரிக்கும் எனவே வரக்கூடிய செலவுகளை சுப செலவுகளாக மாற்றுங்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்கள் நடைபெறுவதற்கு இது ஏற்ற கால கட்டமல்ல. காதல் சுகமானதாக இருக்காது. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்விக்காக செலவுகள் அதிகரிக்கும். படிப்பில் கவனம் தேவைப்படும். ஏழரை சனி காலம் என்பதால் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து விடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக ஜூலை மாதத்தை கடந்து விடுங்கள்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications