ஜூலை மாத ராசி பலன் 2023: லாபத்தை அள்ளித்தரும் குரு ராகு..கோடி கோடியாக செல்வம் யாருக்கு தேடி வரும்?
சென்னை: ஜூலை மாதம் அற்புதமான மாதம். ஆனியும் ஆடியும் இணைந்த மாதம். சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மிதுன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் லாப குருவினால் தொழிலில் லாபங்களும் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. ஜூலை மாதத்தில் என்னென்ன யோகங்கள் கிடைக்கப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அதி அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசியில் சில நாட்கள் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டிலும் மூன்றாம் வீட்டிலும் பயணம் செய்யப்போகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். ராசி அதிபதியின் பயணம் உங்களுக்கு வெற்றியை தேடி தரப்போகிறது. வாக்கு பலிதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் நீங்கள் சொன்னதை கேட்பார்கள். உங்களுடை வெற்றிகளுக்கான அடித்தளம் அமைக்கப்போகிறீர்கள். மாத பிற்பகுதியில் புதன் மூன்றாம் வீட்டிற்கு செல்லும் போது உங்களுக்கு வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது.
புது வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் தேடி வரும். செவ்வாய், சுக்கிரன் இணைந்து மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருந்த தடைகள், சிக்கல்கள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். லாபமும் முன்னேற்றமும் உங்களுக்கு கிடைக்கப்போகிறது. இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாயுடன் பயணம் செய்யும் சுக்கிரன் கணவன் மனைவி இடையே குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ராகு உடன் குருபகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் இந்த காலத்தில் பணம் மழையாக பொழியப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூரிய பகவான் மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேச்சில் கவனம் தேவை. கோபத்தோடு பேசுவதை தவிர்த்து விடுங்கள். சனி பகவான் வக்ரமடைந்து பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பாதிப்புகள் குறைந்து பொருளாதார வளம் அதிகரிக்கும். அஷ்டம சனி காலத்தில் வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு உற்சாகமான மாதம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு அற்புதமான மாதம். புதன் சூரியன் சேர்க்கையால் உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது. நரசிம்மர் வழிபாடு இந்த மாதம் நன்மையை தரப்போகிறது. பானகம் நிவேதனம் செய்து வழிபடுங்கள் வெற்றிகள் தேடி வரும். பகைவர்களை வெல்வீர்கள். எதிரிகள் தொந்தரவு நீங்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications