ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா?

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத ராசிபலன் 2026: 2026 ஜூன் மாதம் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ராசியினருக்கு பல முக்கிய முன்னேற்றங்களை கொண்டு வரக்கூடிய மாதமாக அமையுமா, தொழில், பணவரவு, கல்வி, வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் குடும்ப வாழ்க்கை ஏற்படும் மாற்றங்கள், என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு ஜூன் மாதம் மிகவும் உற்சாகமான காலமாக இருக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமையான நிலையில் இருப்பதால் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை, உயர்கல்வி மற்றும் வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும் சூழல் உருவாகும்.

june-horoscope-2026-career-growth-wealth-and-new-opportunities-for-aries-taurus-and-gemini

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதுடன், புதிய முயற்சிகள் வெற்றியை நோக்கி நகரும். ஜூன் 15-ஆம் தேதிக்குப் பிறகு பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு அதிகரிப்பதுடன் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக அமையும். குருவின் சாதகமான அமைப்பு காரணமாக கல்வி, போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகம். கலை, ஊடகம், சினிமா மற்றும் படைப்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்டகாலமாக இருந்து வந்த கடன் சுமை குறையும். காதல் உறவுகள் வலுப்பெற்று திருமணமாக மாறும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகமும் காணப்படுகிறது.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதமாக ஜூன் அமையும். குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் சாதகமான தாக்கம் தொழில், வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்பில் வளர்ச்சியை ஏற்படுத்தும். தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், நிதி மற்றும் பங்குச்சந்தை துறைகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகள் உருவாகும்.

நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். புதிய திட்டங்களை தொடங்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் ஏற்ற காலமாக இந்த மாதம் அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+