கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத ராசிபலன் 2026: 2026 ஜூன் மாதம் கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு ஏற்படும் மாற்றங்கள், என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

June Horoscope 2026

இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார்.

அந்த வகையில், இந்த மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியினருக்கு ஜூன் மாதம் மிகவும் சாதகமான காலமாக அமையும். குரு பகவான் ராசியிலேயே இருப்பதால் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் மற்றும் தாமதங்கள் படிப்படியாக விலகும். தொழில், வியாபாரம் மற்றும் கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றியை காணலாம். பொருளாதார நிலை மேம்படுவதுடன், கடன் சுமைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குழந்தைகள் தொடர்பான கவலைகளும் குறையும். அரசு அனுமதிகள், சட்ட ரீதியான விவகாரங்கள் மற்றும் நிலுவையில் இருந்த பணிகளிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த மாதம் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாக இருக்கும். இருப்பினும் குருவின் பார்வை காரணமாக பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பு கிடைக்கும். கடன், உடல்நலம் மற்றும் போட்டி சார்ந்த விஷயங்களில் நம்பிக்கையுடன் செயல்படலாம். பெற்றோர் தொடர்பான கவலைகள் குறையும்.

நீண்ட நாட்களாக மன அழுத்தத்தை ஏற்படுத்திய சில பிரச்சனைகள் ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் தீர்வை நோக்கி நகரும். தொழில் மற்றும் முதலீட்டு விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்ல பலனைத் தரும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு ஜூன் மாதம் முன்னேற்றம் மற்றும் லாபத்தை அளிக்கும் காலமாக அமையும். தொழில், வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்பில் வளர்ச்சி காணப்படும். குரு மற்றும் சுக்கிரனின் சாதகமான அமைப்பு காரணமாக வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநில பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

இருப்பினும் மாதத்தின் முதல் பாதியில் கோபம் மற்றும் அவசர பேச்சுகளை கட்டுப்படுத்துவது அவசியம். காதல் மற்றும் உறவுகள் தொடர்பாக பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற நிதி பொறுப்புகள் மற்றும் ஜாமீன் போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது பாதுகாப்பை அளிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+