ஜூன் மாத ராசி பலன் 2022..மகாலட்சுமியின் அருள் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் தெரியுமா
ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் கைகூடி வரும் என்று பார்க்கலாம். தனுசு மற்றும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் நல் வாய்ப்புகள் தேடி வரப்போகிறது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு கல்யாண யோகம் கை கூடி வரும். ஜூன் மாதம் கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார், ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

கும்பம்
ராசிநாதன் சனிபகவான் ஜென்ம சனியில் பயணம் செய்கிறார். சனி வக்ரமடைந்து பயணம் செய்வதால் தடைபட்ட காரியங்கள் இனி தடைகள் நீங்கி வெற்றிகரமாக நடைபெறும். செய்யும் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். தன வாக்கு ஸ்தானத்தில் குரு செவ்வாய் இணைந்து மங்கள யோகத்தை தரப்போகிறது. பண பலம் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மன நிலை உற்சாகமாக இருக்கும். சொன்னதை செய்யக்கூடிய தைரியம் அதிகரிக்கும். புத்தியில் தெளிவு பிறக்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும்.

வெற்றிகள் தேடி வரும்
தடைகள் நீங்குவதால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். திருமணம், சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் சுபகாரியம் கை கூடி வரும். நல்ல செய்தி தேடி வரும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவுடன் கல்யாணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ராகு கேதுவின் பயணத்தால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மன அழுத்தங்கள் நீங்கும். அதிக பண வரவினால் சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் நீங்குவதால் மன சிக்கல்கள் நீங்கும். புதிய முதலீடுகளுக்கு ஏற்றமாதமாக உள்ளது. மாணவர்களுக்கு அற்புதமான மாதம் எண்ணங்கள் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வரும். உங்களின் வாக்கு பலிதமாகும் மாதமாக அமைந்துள்ளது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. ராசி நாதன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் செயல்களை உறுதிகயாவும் தைரியமாகவும் செய்வீர்கள். நற்சிந்தனைகள் அதிகரிக்கும். செவ்வாயுடன் இணைந்து குரு மங்கள யோகம் கை கூடி வந்துள்ளது. அதிர்ஷ்டத்தோடும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்வீர்கள். எதையும் வெளிப்படையாக பேசுவீர்கள். சில நேரங்களில் இது வெற்றிகரமாக கை கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதாலும் உடலாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
இரண்டாம் வீட்டில் உள்ள ராகுவினால் பேச்சில் தேவையற்ற வார்த்தைகளை விட வேண்டாம். புதன் உங்களுக்கு நிறைய நற்பலன்களை தருவார். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

கெட்டிமேளம் கொட்டும்
மாத பிற்பகுதியில் நல்ல வேலை கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் கைகூடி வரும். அடுத்தவரிடம் குடும்ப பிரச்சினைகளை கூற வேண்டாம். குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். தேவையற்ற சிந்தனைகள் வேண்டாம். எதையும் யோசிக்காமல் நேர்மறையாக சிந்தனை செய்யுங்கள். சூரியனின் இடப்பெயர்ச்சியால் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். வயிறு பிரச்சினைகள் வந்து போகும் உணவுக்கட்டுப்பாடு. யாரையும் முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். இந்த மாதம் நிறைய நன்மைகளும் சில பாதிப்புகளும் நிறைந்த நினைத்ததை சாதிக்கும் மாதமாக அமைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications