ஜூன் மாத ராசி பலன் 2022.. கணவன் மனைவி உறவில் கசப்புணர்வு..கவனமாக இருக்க வேண்டியவர்கள் யார்?
ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் வரும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாத ராசி பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. ராசிக்குள் கேது ஏழாம் வீட்டில் ராகு, சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் செவ்வாய் குரு, எட்டாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியன் மாத பிற்பகுதியில் இடப்பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டிற்கு பயணம் செய்வது சிறப்பு. சுக்கிரன் பார்வையால் குதூகலம் உண்டாகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். குருவோடு இணைந்த செவ்வாயினால் புத்திரபாக்கியம் உண்டாகும். அலைந்து திரிந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வீடு சொத்து சேர்க்கை ஏற்படும்.

யோசித்து செயல்படுங்கள்
வேலையில் எதிர்பார்க்கிற அளவிற்கு பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது. பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். இருக்கிற வேலையை விட்டு விட்டு நல்ல வேலையை பார்ப்பது நல்லது. ராசியில் உள்ள கேது சில சிக்கல்களைத் தருவார். திருமண பொருத்தம் பார்க்கும் போது எச்சரிக்கை தேவை. காரணம் களத்திர ஸ்தானத்தில் ராகு சுக்கிரன் இணைந்துள்ளார்.

குடும்பத்தில் சிக்கல் கவனம்
காதல் பெரிய அளவில் கைகூடி வராது. கணவன் மனைவி இடையே சண்டைகள் ஏற்பட்டு மன வருத்தங்கள் ஏற்படும். நோய்கள் நீங்கி சக்திகள் அதிகரிக்க விநாயகரை வழிபடுவது சிறப்பு. தடைகள் தாண்டி சுப காரியங்கள் நிறைவேறும். சுப காரிய செய்திகள் தேடி வரும். வரன் பார்க்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது அவசியம். பண வரவு அதிகரிக்கும். பல தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். தசாபுத்தி சரியாக இருந்தால் நல்லதே நடக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம்
மாத பிற்பகுதியில் கிரகங்கள் இடம்மாறுவதால் கவுரவ பதவி கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே சண்டைகள் வந்தால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாம்பத்ய வாழ்க்கையில் சில வருத்தங்கள் உண்டாகும். பெண்கள் இணைந்து தொழில் செய்வீர்கள். தொழில் பார்ட்னருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முதுகு, வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. விநாயகப்பெருமானை வணங்குவது சிறப்பு. மொத்தத்தில் இந்த மாதம் கவனமாகவும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய மாதமாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications