ஜூன் மாத ராசி பலன்: விரைய சனியை அசால்டாக தூக்கும் மேஷ ராசி.. ஜாக்பாட் யோகம்
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கொடுத்து சிவந்த கரங்களாக இருப்பார்கள். பொதுவாகவே பிறருக்காக உழைத்து ஏமாறக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு செயலில் வேகம், விவேகம் உடைய நல்ல மனிதர்களாகவும், தன்னலம் கருதாமல் உதவுபவர்களாகவும் இருப்பார்கள். லக்கினத்தில் சுக்கிர பகவான் அமர்ந்து இந்த மாதம் ஆரம்பிக்கப் போகிறது. அந்த வகையில், செல்வ செழிப்போடு வாழும் காலமாக அமையும்.

பொருளாதாரம்
பொதுவாக காசு, பணம் நன்றாக வர வேண்டும் என்றால் ஜாதகத்தில் தன ஸ்தானமும், தனக்காரகன் குரு பகவான் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்கு தன ஸ்தானதிபதியாக இருக்கக்கூடியவர் சுக்கிர பகவான். தற்போது சுக்கிர பகவான் ராசியில் அமர்ந்து மாதத்தை ஆரம்பிப்பதால் மாதம் முழுவதும் நல்ல பணவரவு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சுக்கிர பகவான் ராசியில் அமர்ந்திருக்கிறார். 5 ஆம் இடமான சூரியன் முதல் 15 நாட்களுக்கு ராசியின் தன ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல வருமானத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். குடும்பத்தை நடத்துவதற்கு, தொழிலை நடத்துவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பண வசதிகள் எல்லாம் கிடைக்கும்.
விரைய சனி
12 ஆம் இடத்தில் விரைய சனி. ஏழரை சனி தொடங்கியுள்ளது. சனி பகவான் விரையமாக இருந்தால் இந்த மாதத்தில் வேலை மாற்றம் உண்டாகும். வேலை மாறுகிறதே என்று பயப்படத் தேவையில்லை. நல்ல வேலை, நல்ல முன்னேற்றம் உண்டாகும். வரும் மாற்றங்கள் எல்லாம் வளர்ச்சியைும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். புதிய தொழிலை ஆரம்பித்து முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
7 ஆம் இடம் என்பது திருமணத்தை குறிக்கக்கூடிய ஸ்தானம். மேஷ ராசிக்காரர்களுக்கு 7 ஆம் இடத்துக்கான அதிபதியே சுக்கிரன் என்பதால் சுக்கிரனின் அருளால் திருமண யோகம் கூடி வரும். பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த மணமகன் அமைவார். ராசிநாதனாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் முதல் 7 நாள் நீச்சமாக இருக்கிறார்.
8 ஆம் தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குப் போகிறார். 8 ஆம் தேதிக்கு மேல் பெண் பார்க்கும் படலங்கள் வைக்கும்போது நல்ல கணவர் அமைவார். அருமையான வாழ்க்கை துணை கிடைக்கும். ஆண்களைப் பொருத்தவரை யோகம் நிறைந்த மனைவி அமைவார். காதல் உறவுகள் வளரக்கூடிய நேரமாக இருக்கும்.
மாணவர்கள்
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அருமையான மாதமாக இருக்கும். சூரியன், குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் மாணவர்களுக்கு ஆசிரியரின் உதவிகள் கிடைக்கும். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆம் இடத்தில் இருந்த செவ்வாய் 5 ஆம் இடத்துக்குப் போன பிறகு நல்ல உயர்கல்வி, விரும்பிய துறைகள் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் துறைகள் முன்னேற்றத்தை தரும் துறையாக அமையும்.
கலைத் துறையினர்
சுக்கிரன், புதனின் அருளால் கலைத் துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் வரும். சிறிய வாய்ப்புகள் வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. திரைத்துறை, மீடியா துறையில் வரும் பொன்னான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பெண்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதமாக இந்த மாதம் இருக்கும். அதிர்ஷ்டம், முன்னேற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications