ஜூன் ராசி பலன்: சிம்மம், கன்னி ராசிக்கு அடிச்சது லாட்டரி.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
ஜூன் மாத ராசி பலன்கள்: சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றன. நிறைய யோகங்கள் கிடைக்கும். கடந்த ஆண்டுகளில் பல்வேறு விதமான சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்து வந்திருப்பார்கள். இனி அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கைகூடி வரும். ஆவணங்களில், ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை படித்து மிகுந்த எச்சரிக்கையுடன் கையெழுத்திடுவது நல்லது.

நல்ல வாழ்க்கை அமையும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த குழந்தைகள், உறவினர்கள் எல்லோரும் உங்களுடன் மீண்டும் வந்து சேரும் அமைப்பு உண்டாகும். உதவி கேட்பவர்களுக்கு அதனை செயல்படுத்திக் கொடுப்பீர்கள். பூரம் என்பது குட்டி சுக்கிரன் எனலாம். நல்ல யோக அமைப்பை கொண்டவர்.
படிப்பில் மந்தமாக இருந்த குழந்தைகள் இனி ஆக்டிவாக இருப்பார்கள். தாய், தந்தை சொல் பேச்சு கேட்டு நடக்கும் யோகம் உண்டாகும். சாதனை படைக்கும் யோக அமைப்பு உள்ளது. நிலம், வீடு, மனை வாங்குவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது நல்லது.
கோபப்படுவது மற்றவர்கள் மேல் பழிபோடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கையோ, தம்பியோ இருந்தால் அவர்களுக்கு உதவி செய்வது, அவர்கள் மனதை காயப்படுத்தாமல் இருந்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். விநாயகரை வழிபட வழிபட அற்புதங்கள் உண்டாகும். விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
உங்களுடைய குறைகள் எல்லாம் இனி நிறைவகும். பயணங்கள் மேற்கொள்வது நன்மை பயக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் நவக்கிரகங்களுக்கு விளக்குப் போடுவது நன்மை பயக்கும். மன அமைதி, வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு 10 ஆம் வீட்டில் இருப்பதால் நல்ல விஷயங்கள் உண்டாகும். திறம்பட வாழ்க்கையை வாழ்வீர்கள். மருத்துவப் படிப்பு விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டாகும். நிறைய பேருக்கு பல் மருத்துவராகும் யோகம் உண்டாகும். குழந்தையைப் பிரிந்த வாழ்பவர்கள் இனி அவர்களுடன் சேரும் அமைப்பு உண்டாகும். வெளிநாட்டில் தாய், தந்தையைப் பிரிந்தவர்களும் இனி ஒன்று சேரும் யோகம் உண்டாகும்.
மருத்துவத் துறையில் சிறப்பான உயரிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து தட்சிணாமூர்த்திக்கு சாற்றி வழிபடுவது அருமையான பலன்களைத் தரும். கொண்டைக் கடலை மாலை சாற்றுவது, இயன்ற உதவியை செய்து வந்தால் பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று சேரும் யோகம் உண்டாகும்.
குரு 10 ஆம் வீட்டில் இருப்பதால் யோகாதிபதிகள் அனைவரும் வலுவாக இருப்பதால் அற்புதமான யோகங்களைத் தருவார்கள். வண்டி, வாகனங்கள் விஷயங்களில் பொறுமையைக் கையாளுவது நல்லது. யோசனை செய்து கொண்டே வண்டியை இயக்காமல் இருப்பது நல்லது. பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நன்மை ஏற்படும்.
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகம், தொழில், படிப்பில் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications