Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் ராசி பலன்: சிம்ம ராசிக்கு அஷ்டமசனியாக இருந்தாலும் அடிக்கும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

june-month-rasi-palan-simmam-leo-rasi-people-will-get-lots-benefit-during-this-month

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோசம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் சிம்ம ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பான மனிதர்களாக இருப்பார்கள். எப்போதுமே பரபரப்பாக இருக்கக் கூடியவர்களாகவும், வேலைகளை திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். குடும்பத்தை நன்றாக நடத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் குடும்பத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2 ஆம் இடத்தின் அதிபதியான குரு பகவான் லாபத்தில் இருக்கிறார். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குடும்ப ஸ்தானதிபதி புதன் பவான் ராசியில் வருவதால் திருமணத்துக்கான வரன்கள் அதிக அளவில் வரும். மனைவியின் மனதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

9 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் இருக்கும்போது பண விஷயங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி 8 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இல்லாமல் இருந்திருப்பீர்கள். குலதெய்வத்தை வழிபடுவதால் 8 இல் இருக்கும் சனி பாதிப்புகளைத் தராது. வேலையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவர்கள்

மாணவர்களைப் பொருத்தவரை கல்வியில் சிறந்து விளங்க புதன், செவ்வாய், குரு கிரகங்களின் நிலை மிகவும் முக்கியமானது. புதனின் அருளால் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். செவ்வாய் பகவான் முதல் 7 நாட்கள் நீச்சமாக இருப்பதால் 10, 11, 12 மாணவர்களுக்கு சிறு சிறு தடுமாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஜூன் 8 ஆம் தேதிக்குப் பிறகு அருமையான காலகட்டமாக இருக்கும். நல்ல கல்லூரி, விரும்பிய துறைகள் கிடைக்கும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் உயர்கல்வி படிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும் மாதமாக இருக்கும்.

தொழில்

சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தொழிலில் பட்டையை கிளப்புவீர்கள். சனி உங்களைத் தடுப்பதால் பணியாட்கள் பிரச்சனை வரும். இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். குறிப்பாக, பெண் தொழில்முனைவோர்களுக்கு மிகச்சிறந்த வளர்ச்சி உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.

குழந்தை பாக்கியம்

பிள்ளைகளுக்கு நிறைய செய்வீர்கள். ஆனால், அவர்களுடைய செயல்பாடு உங்களுக்கு திருப்தியாக இருக்காது. எதவாது ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். தற்போது உங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் சூழல் உருவாகும்.

ஆரோக்கியம்

அஷ்டமத்து சனி உங்களுக்கு இருப்பதால் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. உடம்பில் சிறு தொந்தரவு வந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மூட்டு வலி, நெஞ்சக நோய் உள்ளிட்டவை உள்ளவர்கள் சரியான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்தால் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

கலைத் துறையினர்

பாக்கியத்தில் சுக்கிரன் போகிறார். லாபத்தில் புதன் இருப்பதால் புதிய படங்கள், நாடகங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தங்கள் வரும். ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவதற்கான வாய்ப்புண்டு. அனைத்து துறை கலைஞர்களுக்கு மாற்றம், முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

அரசியல்

சிம்ம ராசியில் பிறந்த அரசியல் தலைவர்களுக்கு பத்தாம் இடத்தில் சூரியன் இருப்பது சாதகமான சூழ்நிலையைத் தரும். 15 ஆம் தேதி சூரிய பகவான் லாபத்திற்கு வருவது திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் காலகட்டமாக இருக்கும். மிகுந்த முன்னேற்றம் மற்றும் எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் நல்ல மாதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+