Rasi Palan This Week: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. கடக ராசிக்கு கோடியில் புரளும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Kadagam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Kadagam Weekly rasi palan lucky zodiac signs

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் கடகத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)

கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலில் பெரிய மாற்றம் ஏற்படும். நிறைய பேருக்கு அரசாங்க உத்தியோகம், அரசியல் பதவிகள், அரசியலில் வெற்றி கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பெரிய வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. மிகப்பெரிய பணத் தொகை வந்து சேரும்.

பெரும் பணம்

வீட்டை விற்று, சொத்தை விற்று நல்லபடியாக பணம் வரும். காதலில் வெற்றி பெறும் யோகம் உண்டு. மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய பேர் இன்பசுற்றுலா சென்று வருவீர்கள். விபரீதமான விளையாட்டுகளை அங்கு செய்வீர்கள். ஆனால், சுற்றுலா செல்லும் இடங்களில் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வாழ்க்கை வேறு அளவுக்குச் செல்லும் வாய்ப்பு வரும். உன்னதமான நிலைமைக்குச் செல்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் யோகம் உண்டு. எந்த விஷயத்தையும் யோசித்து கொண்டிருக்காமல் உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். எதிர்காலத்தில் ஜெயம் ஏற்படும்.

ஆரோக்கியம்

முட்டியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திட பதாத்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். நிறைய பேருக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அதற்கான மருத்துவங்களை எடுத்துக் கொள்வீர்கள். இருக்கும் வேலையை ரிசைன் செய்துவிட்டு புதிய வேலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

வழிபாடு

அப்பாவுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பாதிப்புகள் வந்தாலும் மருத்துவமனையில் சென்று பார்ப்பது நன்மை பயக்கும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 85 சதவீதமும் நன்றாக இருக்கும். துர்க்கை தேவி, திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும். கோளார் பதிகத்தை தினமும் கேட்பது, சொல்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+