Rasi Palan This Week: கடக ராசிக்கு காசு மழை கொட்டும் யோகம்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
Kadagam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் கடகத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு காசு பணம் வந்து கொண்டே இருக்கும் யோகம் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலமாக இடையூறுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. பெண்களிடம் ஆண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் மூலமாக பிரச்சனைகள், உணவுகள் மூலமாக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
உறவினர்கள் நண்பர்கள் மூலமாக, முதலீடுகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கையிருப்பு பணம் விரயமாவதற்கான வாய்ப்புள்ளது. பாக்கிய ஸ்தானம் வலுவில்லாமல் இருப்பதால் கவனம் தேவை. எந்த காரியங்களை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை முயற்சிகளைப் போட வேண்டியதிருக்கும். கடுமையான பகை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
அனுகூலம்
எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். நம்பிக்கை, தொழில், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். லாபம் அபரிமிதமானதாக இருக்கும். புதிய விஷயங்களை எடுத்து செய்யும் யோகம் உண்டாகும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் தேடி வருவார்கள். வியாபாரம், படிப்பு இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமை மாறும்.
மேன்மை
தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கால் முட்டி பாதம் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விரயத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் சுப காரியங்கள், அலைச்சல், பயணங்கள், சரியான சாப்பாடு சாப்பிட முடியாத சூழலை ஏற்படுத்தும்.
பிரச்சனை தீரும்
துணைக்கும் உங்களுக்கும் இருந்த பிரச்சனைகள் தீரும். வயிறு, மன அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. எதிரிகளை குறைவாக மதிப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் தேவையில்லாமல் உங்கள் எதிரிகளைப் பற்றி பேசுவதால் பிரச்சனைகள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
துர்க்கை வழிபாடு ஏற்றத்தைத் தரும். நண்பர்களுக்காக, சகோதரர்களுக்காக செய்யும் விஷயங்களில் வெற்றி ஏற்படும். அதிர்ஷ்டங்கள் கொட்டும் காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும். ஐயப்பனை வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொடுக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications