Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் கடக ராசி.. சூப்பர் மாற்றம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-kadagam-cancer-signs-will-get-from-november-10-to-16

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். முருகர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நல்ல பலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

மாற்றம்

இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றத்தைக் கொடுக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக மேலதிகாரிகளால் பாதிப்புகளைச் சந்தித்து வந்தவர்களுக்கு அதுபோன்ற நிலைமைகள் மாறும். அண்டை, அயலார் வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் பெரும் வெற்றியையும், புகழையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

தொழில்

தொலைதூரத்தில் இருந்து வரும் நல்ல செய்திகள் பெரிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். உத்தியோகத்தில் அதீதமான ஏற்றம் காணப்படும். ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் கவனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கியம்

ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கிம் தொடர்பான விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. பதட்டம், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் சிறிய பாதிப்புகள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

திடீர் அதிர்ஷ்டம்

எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பது, இரவில் விழித்துக் கொண்டே இருப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மன நிலையை ஒருநிலைப்படுத்தும் தியானம் போன்றவற்றை செய்வது நல்ல பலன்களைத் தரும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்றத்தைத் தரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள், குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

அனுகூலம்

துணை விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி அனுகூலம் ஏற்படும். பிரிந்த தம்பதிகள் முயற்சி செய்தால் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+