Rasi Palan This Week: கடக ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. நட்பு விஷயத்தில் இதை மட்டும் பண்ணாதீங்க
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள், துணை, பெற்றோர் விஷயத்தில் நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். பிறந்த இடத்திலும், ஏற்கனவே இருந்த இடத்திலும் இருந்த பழைய உறவுக்காரர்களால் ஏதோ ஒரு பாதிப்புகள் மனத் தாங்கல்கள் காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பொறுமையாக அதனை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.
நண்பர்கள்
சிந்தித்துக் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பழைய நல்ல நண்பர்களை மன வருத்தப்படும்படி எந்த செயலையும் செய்யாமல் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும். குரு ஜென்மத்துக்கு வந்திருப்பதால் நண்பர்களைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றும். நல்ல நண்பர்களை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் உண்மையாக உங்களுடன் இருந்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுடன் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது.
கவனம்
60 வயதைக் கடந்தவர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள் குடும்ப விஷயத்தில், வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில், பிள்ளைகளின் படிப்பு உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
துணை விஷயத்தில் இருந்து வந்த மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும். சிவன் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும். முதுகுத் தண்டுவடம், கால் பகுதி, மன அழுத்தம், ஞாபக மறதி ஏற்படும் வாய்ப்புள்ளது. அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது நன்மை பயக்கும்












Click it and Unblock the Notifications