Rasi Palan This Week: கடக ராசிக்கு வரப்போகும் பிரகாசமான மாற்றம்.. கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும் வாரமாக இந்த வாரம் இருக்கம். 4 ஆம் இடத்தில் இருக்கும் புதன் தேவையில்லாத செலவுகள், பிரச்சனைகள், ஆசைகளைக் கொடுக்கும். தற்போது பஞ்சம ஸ்தானத்தில் போவதால் பிள்ளைகளுக்கு நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு அரசு வேலைகள் கிடைக்கும். மருத்துவ சீட்டுகள் கிடைக்கும். எந்த விஷயத்தையும் செய்யலாம் என்கிற எண்ணம் தோன்றும்.
கோபம் வேண்டாம்
கோபத்தைக் கட்டுப்படுத்தினால் எந்த விஷயமாக இருந்தாலும் செய்யலாம் என்கிற நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கோர்ட், வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பகையில் ஜெயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பயணங்கள் அதிகளவில் ஏற்படும்.
அனுகூலம்
எல்லா விஷயத்திலும் நல்லது நடக்கும். புதிய பொறுப்புகளுக்கு வரும் அற்புதமான காலகட்டம். துணை விஷயத்தில் நல்லது நடக்கும் காலகட்டம். பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை நீங்கும். மன அழுத்தம் தீரும். தூக்கமின்மை, யோசனை இருந்து கொண்டே இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
குருவால் பிரச்சனை
அதிசாரத்தில் இருக்கும் குருவால் தொந்தரவுகள் ஏற்படும் என்பதால் விடாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. வியாழக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது ஏற்றத்தை தரும். எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றி ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். உத்தியோகத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த மனம், பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
ஏற்றம்
தனிப்பட்ட பயணங்கள், புதிய பொறுப்புகளுக்கு வருவது, புதிய ஏற்றம் பெறுவது என அற்புதமான காலகட்டமாக இருக்கும். ரத்தபந்த உறவுகளில் பிரஷர், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. சில பேருக்கு விபத்துகள் நடக்கும் வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.
-
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications