Kadagam Rasi Palan: தடைகளை தவிடு பொடியாக்கும் கடக ராசி.. ஆடம்பரமாக வாழப் போறீங்க
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். விரயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதனை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. எதிரிகள் விஷயத்தில் வெற்றி ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவு, ஆடம்பரம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும்.
செல்வாக்கு கூடும்
தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் எல்லாம் நீங்கும். நன்மைகள் அதிகரிக்கும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். துர்க்கை கவசம் கேட்பது நன்மையைத் தரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கூட்டாளிகள் விஷயத்தில் நன்மை ஏற்படும். தேர்தலில் வெற்றி உண்டாகும்.
சிக்கல் நீங்கும்
நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மனதில் சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம், ஏற்றம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்கள் ஆதாயம் ஏற்படும். கடல் கடந்து படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். வாகனத்தில் அதீத நன்மைகள் ஏற்படும்.
மாற்றம்
வாகனத்தில் மாற்றம் செய்வீர்கள். தொழிலில் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். தொழில் மாற்றம், வாகன மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு ஏற்றத்தை தரும். வியாழக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது சந்தோஷத்தை ஏற்படுத்தும். கழிவுப் பாதையில் சிறிய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை தோறும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாப்பாடு எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது தடைகளை நிவர்த்தி செய்யும்.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications