Rasi Palan This Week: கடக ராசிக்கு கடன் பிரச்சனை எல்லாம் தீரப்போகுது.. காதல் கைகூடும் சூப்பர் நேரம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-signs-will-get-from-december-22-to-28

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதமாக முடியும். திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை, சுபகாரியத் தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கடகம் இருக்கக்கூடிய வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

செட்டிலாகும் யோகம்

பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சனி, புதன் இணைந்திருப்பதால் வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். எதிர்பாராத நட்பு, சந்தோஷம், எதிர்பாராத காதல் உண்டாகும். வாழ்க்கையில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிப்பது, டாக்குமென்டேஷன் செய்து கொடுப்பது, கை மாற்றி விடுவது, தான பத்திரங்கள், தான செட்டில்மெண்டுகள் வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

புதன் பார்வை

உங்களுக்கு எந்தவித ஆரோக்கிய குறைபாடும், மன அழுத்தமும் ஏற்படாது. தந்தையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. வேலையாட்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. புதன் பார்வை இருப்பதால் லாபம், வளம் உண்டாகும். நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். 2 இல் கேது, 8 இல் ராகு இருப்பதால் மன அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கீழ் முதுகுத் தண்டுவட பாதிப்புகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

பெண்கள் கவனம்

கடக ராசி பெண்கள் மிதுந்த கவனமாக இருப்பது நல்லது. வண்டிகளில் செல்லும்போது அதீத கவனமாக இருப்பது நல்லது. ஸ்பீடு பிரேக்கர்களில் கவனமாக செல்வது நல்லது. இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.

வழிபாடு

நவக்கிரகத்தில் இருக்கும் ராகு வழிபாவியாழக்கிழமை தோறும் புத்தாண்டு முழுக்க உணவளிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். குபேர யோகம், அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும்.டு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதாரமும் 90 சவீதம் நன்மைகள் நடக்கும் வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+