மே மாத பலன் 2026: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. குட் நியூஸ் ஆன் தி வே

Subscribe to Oneindia Tamil

மே மாத பலன்கள் 2026: கடகம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kadagam-cancer-rasi-people-during-this-may-mont

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், கடகம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசியினருக்கு லாபங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். பெரியவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் கிடைக்கும் யோகம் உண்டு. பயணங்களால் சந்தோஷம் ஏற்படும். அரசாங்க உத்தியோகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவராகும் யோகம் உண்டு. மெடிக்கல் சீட் கிடைக்கும். மத்திய அரசு வேலை கிடைக்கும்.

ஆரோக்கியம்

சீருடை வேலைகள் கிடைக்கும் யோகம் உண்டு. நண்பர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறக்கூடிய காலகட்டமாக இருக்கும். நண்பர்களை நம்பாமல் இருப்பது நல்லது. சகோதரருக்கு ஆரோக்கிய பிரச்சனை, கண் சிகிச்சை, தலையில் அடிபடுவது போன்றவை ஏற்படும். உங்களுக்கு கால்சியம் தொடர்பான பாதிப்புகள் வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சேமிப்புகளை செய்து வைப்பீர்கள்.

பணவரவு

நிறைய பணம் கையிருப்பில் இருக்கும். எஃப்டி போன்றவற்றை வங்கிகளில் போட்டு வைப்பீர்கள். தங்கம் வாங்குவது போன்ற முதலீடுகளைச் செய்வீர்கள். பெரிய பொறுப்பு கிடைக்கும். தைரியமும், பொறுப்பும் உண்டாகும். அசாத்தியமான வெற்றிகள் காணப்படும். முழு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய சந்தோஷம் ஏற்படும்.

முன்னேற்றம்

வேலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் வரலாம். உங்களின் முயற்சி மற்றும் பொறுமைக்கு மதிப்பு கிடைக்கும். வேலை மாற்றத்துக்காக நினைப்பவர்கள் அவசரப்படாமல் சரியான வாய்ப்பை காத்திருக்கலாம். பணவரவு சாதாரணமாக இருக்கும். பெரிய அளவில் வருமானம் வராமல் இருந்தாலும், தேவையான செலவுகளை சமாளிக்க முடியும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.

வழிபாடு

குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். பழனி முருகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீத நன்மைகளையும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதமும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+