Kadagam Rasi Palan: கடக ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி.. சித்திரை மாத பலன்கள் முழு விவரம்
Chithirai matha palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், கடக ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் நாளை அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம் (Kadagam Rasi Palan)
கடக ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம் நன்றாக இருக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பாதிப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொடர்ந்து இருந்து வந்த பணம் சார்ந்த பிரச்சனைகள், மனம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
முயற்சிகளில் வெற்றி
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை ஏற்படுத்தும். சந்தோஷம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். முதலீடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். எந்தவிதமான கடினமான விஷயங்களையும் நீங்கள் செய்யலாம். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அமைப்பு உண்டு. பெரிய அளவுக்கு நம்பிக்கையும், ஏற்றமும் ஏற்படும்.
வேலைவாய்ப்பு
புதிய வேலை வாய்ப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் தொடர்புத் திறன் மூலம் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் மார்க்கெட்டிங், நெட்வொர்க் மூலம் லாபம் வரும். பணவரவு, வருமானம் மெதுவாக அதிகரிக்கும். கூடுதல் வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
செலவுகள் இருந்தாலும், சரியான திட்டமிடல் இருந்தால் சேமிக்க முடியும்
முன்னேற்றம்
மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய திறன்கள் கற்றுக்கொள்வதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்துவோருக்கு வெற்றி ஏற்படும். ஒரு விஷயத்தை அதிகமாக யோசிப்பது குழப்பம் தரக்கூடும் என்பதால் யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
வழிபாடு
யோக பலன்கள் அதிகளவில் பெறும் காலகட்டம். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். வயிறு, அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கடக ராசியினருக்கு துர்க்கை வழிபாடு, முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications