Kadagam Rasi Palan: கடக ராசிக்கு நடக்கப்போகும் மேஜிக்.. கார்த்திகை மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நினைக்க முடியாத வெற்றிகள் கிடைக்கும். சுப காரியங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இடமாற்றம், வீடுமாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
உடற்பயிற்சி அவசியம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும். ஜீரண உறுப்பு, முதுகு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வருவது நன்மைகளை ஏற்படுத்தும். தினந்தோறும் தோப்புக்கரணம் போடுவது நல்லது.
ஆரோக்கியம்
கடக ராசியினருக்கு கழுத்து, முதுகு தொடர்பான பிரச்சனைகள் வரும் என்பதால் சூரிய நமஸ்காரத்தை கற்றுக் கொள்வது நல்லது. கழுத்து, முதுகில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய தண்ணீர். நிறைய மோர் குடிப்பது நன்மையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி இனி அடுத்தடுத்து நன்மைகள் நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், லாபமும் காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிறைந்த மாதமாகக் காணப்படும்.
வழிபாடு
8 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் மன அழுத்தம் தீர நரசிம்மர் கேட்பது நன்மை பயக்கும். பதட்டங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சந்திரன் ஆட்சியாக இருப்பதால் சிவன் வழிபாடு செய்வது உங்களுக்கு யோகத்தை தரும். திங்கள்கிழமை சோமாவார விரதம் இருப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications