Kadagam: அடிச்சான் பாரு அப்பாயிண்மென்ட் ஆர்டரு.. கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத கடகம் ராசிக்கான கிரக பலன்கள்.

கடகம்
கடக ராசியினருக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும் மாதமாக இருக்கும். மே 11 ஆம் தேதியில் இருந்து செவ்வாய், 10 ஆம் இடத்துக்கு வந்து ஆட்சியாகிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஜீவன அமைப்புகளில் பெரிய மாற்றம், முன்னேற்றம் இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமை வரும். இரட்டிப்பு லாபம் கிடைக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.
லாபம் கொட்டும்
வேலைக்குச் செல்வதற்கு சந்தோஷப்படும் அமைப்பு உள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம் என அனைத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். பெரிய நல்ல முன்னேற்றங்கள் இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களுடைய எல்லா பிரச்சனைகளும், சவால்களும் குறையும். 11 ஆம் இடத்தில் லாபாதிபதியான சுக்கிரன் பெரும்பகுதி ஆட்சியாக இருக்கிறார். 12 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது லாபம், வெற்றியைத் தரக்கூடிய அமைப்பாக இருக்கும்.
புரோமோஷன்
சம்பள உயர்வு, பதவி உயர்வு, உத்தியோகத்தில் அங்கீகாரம், உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமை மாறும். அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எந்த விஷயத்திற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. எல்லா பிரச்சனைகளும் குறையும் நல்ல அமைப்பு உள்ளது.
அரசு வேலை
அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மே 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் உண்டாகும். 11 ஆம் இடத்தில் சூரியன் வலுவான அமைப்பில் இருப்பதால் அரசாங்க உத்தியோகம் கிடைப்பதற்கான சில ஆரம்பங்கள் ஏற்படும். தந்தையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் மாறும். தந்தையின் உடல்நிலை ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 9 ஆம் இடத்தில் இருக்கும் 7 ஆம் அதிபதியான சனி பகவானால் மனைவியின் மூலமாக பாக்கியம் கிடைக்கும். மச்சான் முறை, மாமன்மார்களால் இருக்கும் கவலைகள் நீங்கும். மாமனார் வழியில் விரயங்கள், கவலைகள், நஷ்டங்கள், ஆதரவில்லாத தன்மை, மனைவியின் சகோதரர்களுடன் இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். அவர்கள் மூலமாக நல்ல ஆதரவு கிடைக்கும்.
முன்னேற்றம்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். கடக ராசி பெண்களுக்கு மன அழுத்தம் நீங்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுடைய தொழில், வேலை, முன்னேற்றம் அற்புதமாக இருக்கும். மே மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications