Rasi Palan This Week: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. வெற்றிக் கொடி கட்டும் நேரம்
Kadagam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உங்கள் வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருப்பார்கள். நிறைய பேர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன், மனைவிக்குள் நிறைய பஞ்சாயத்துகள் ஏற்படும். புதிய தொழில் அமைப்பதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். டிரேடிங் தொழில், கைமாற்றிவிடுவது, புரோக்கரேஜ், கமிஷன் தொழில், ரியல் எஸ்டேட், இடம் விற்பது போன்ற தொழில்களை ஆரம்பிப்பது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
தொழில்
நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குறைந்த முதலீட்டில் நிறைய விஷங்கள் சாதகமாக முடியும். கடை போட்டு வியாபாரம் செய்வது, கல், மணல், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். அதற்கான உரிமம், ஜிஎஸ்டி பெறுவதில் சிறு சிறு தாமதம் ஏற்படும். விரயத்தில் அமருவதால் சிறு சிறு செலவுகளை செய்துதான் சிலவற்றை செய்ய வேண்டியதிருக்கும்.
கடன் தீரும்
அடுத்த டிசம்பர் வரை பாதுகாப்பான சூழல் இருக்கும். தொழில் அமைப்பு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மன அழுத்தம் குறையும். தொழிலில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களில் அனுகூலம் ஏற்படும் வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக நீங்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும்.
பொறுப்புகள் வரும்
மேலதிகாரிகள் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளைக் கொடுப்பார்கள். கூட்டணி அமைப்பில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. எதிர்பாலினத்தவர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். லாபத்தின் அளவு பன்மடங்காக அதிகரிக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்தில் காப்பாற்றும் யோகம் உண்டு.
ஆரோக்கியம்
மற்றவர்களை நம்பி உங்களுடைய வேலைகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். பேராசையைத் தவிர்ப்பது நல்லது. கணவராக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்தையும், மனைவியாக இருந்தால் கணவர் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்வது நல்லது. பெண்கள் இந்த வாரம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆண்களுக்கு அற்புதமான வாரமாக உள்ளது.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். துர்க்கை வழிபாடு, திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்வது அனுகூலத்தைத் தரும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications