Rasi Palan This Week: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. சில விஷயங்களில் கவனம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் மற்றும் ராகு வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் கைக்கு வர வேண்டியது கிடைக்காமல் கூட போகும். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
பண வரவு
காசு பணத்திற்குப் பிரச்சனைகளே இருக்காது. நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இருப்பதால் வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடுகளுக்கு நீங்கள் பேசும் தகவல்கள் தப்பாக போய் சேரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதாரமும் அற்புதமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
உறவுகள் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் நடக்கும். ரத்த பந்த உறவுகள், தாய், தந்தை உறவுகள் என அனைத்திலும் ஏற்றம் ஏற்படும். மரண பயம் நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். நிறைய நல்லவை நடக்கும். எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் பயந்து கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் நீங்கும். மருந்து மாத்திரைகள் கிடைக்கும். ஆச்சரியமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். பெரிய அளவிலான சந்தோஷங்கள் கிடைக்கும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
வாக்குவாதம்
மேலதிகாரிகளிடம், உடன் வேலை செய்பவர்களிடம் தர்க்கம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் உங்களை அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் உங்களை மீண்டும் தேடி வருவார்கள். பெற்றோர், பெரியோரிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்.
-
Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் மிதுன ராசி.. நிறைய டிராவல் பண்ண போறீங்க! -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கொட்டும் லாபம்.. சொத்துகளை வாங்கி குவிக்கும் நேரம் -
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மேஷம் ராசி.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்











Click it and Unblock the Notifications