கடக ராசிக்கு உடனிருப்பவர்களால் வரும் சிக்கல்.. ஜூன் 6 - 1 வரை அதிர்ஷ்டமும் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-from-july-6-to-12

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசியினருக்கு நிறைய பொருள் விரயம் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்கள் செய்யும் சிக்கலால் பெரிய மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் கடக ராசியினர் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகம், தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான ஏற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.

ஆரோக்கியம்

பெருமாள் வழிபாடு நிம்மதியைத் தரும். கழிவுப் பாதை தொடர்பான விஷயங்கள், ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். பதட்டம், மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. ஆடி மாதம் முழுவதும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல் தீரும்

இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வேற்றுமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். வண்டி, வாகனங்கள், பிள்ளைகள், துணை விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் அதிகளவிலான சுப காரியங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். வெளியூர் பயணம், வெளிநாடு பயணம் உண்டாகும்.

பதவி உயர்வு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். வீட்டில் மூத்தவர்களுக்கு அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டம். மூக்கு அடைத்துக் கொள்வது, தொற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

இனிப்பு பதார்த்தம், குளிர்ந்த பொருள்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. எந்த விஷயத்தை செய்தாலும் பொறுமையாக செய்வது நன்மை பயக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பாக்கியத்தில் இருக்கும் சனி பூர்வீகம் தொடர்பான புண்ணியங்களை கிடைக்கச் செய்யும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் காலகட்டம். மீனாட்சி சுந்தரேஷர் வழிபாடு சகலவித நன்மைகளை அள்ளித் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+