Rasi Palan This Week: கடக ராசிக்கு வாயில தான் கண்டமே.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி
Kadagam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள், குடும்பத்தில் நிம்மதியற்ற தன்மை, எதை செய்தாலும் மற்றவர்கள் உங்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கடன் தீரும்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவை உடனிருந்து பார்த்துக் கொள்வது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிரிகள் உங்களைத் தாக்குவதற்கும், களங்கப்படுத்துவதற்கும் காத்துக் கொண்டிருப்பார்கள். அவற்றில் பொறுமையாக இருப்பது நல்லது. எல்லாவற்றிலும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
பேச்சில் கவனம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட சிறு சிறு தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வாக்கு ஸ்தானம் மாசி மாதம் முழுவதும் மாசி 14 ஆம் தேதி வரை நன்றாக இல்லை என்பதால் பேச்சில் கவனம் தேவை. துர்க்கை வழிபாடு ஏற்றத்தையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்.
வாகன யோகம்
வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த அளவுக்கு அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும். எல்லா விதத்திலும் அனுகூலங்கள் காணப்படும். வெளிநாடு பயணம், தூரதேசப் பிரயாணம் செய்வது, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்,
சொத்துகள் சேரும்
காதல் கைகூடும். பூர்வீக சொத்துகள் வந்து சேரும். நல்ல வரன்கள் வெளியூரில் இருந்து வரும். இரவு நேரப் பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். யாரையும் நம்ப முடியாத காலகட்டமாக இருக்கும். பாக்கியத்தில் சுக்கிரன் இருப்பதால் அதிர்ஷ்டம், அமோகமான பலன்கள் கிடைக்கும். சில விஷயங்களை விட்டுக் கொடுத்து பிரச்சனையை முடிக்க கூடிய காலகட்டமாக இருக்கும்.
நினைத்த காரியங்கள் கைகூடக் கூடிய அற்புதமான காலகட்டம். பெரியவர்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். சந்தோஷம் 90 சவீதமும், பொருளாதாரத்தில் 95 சதவீதமும் நன்மைகள் உண்டாகும்.
-
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications