Rasi Palan This Week: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சில விஷயங்களில் கவனம்
Kadagam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் பயணங்களின்போது புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ரத்தபந்த உறவுகளுக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளால் சந்தோஷம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மரண பயத்தை நீக்குவதற்கான உங்கள் முயற்சிகளில் வெற்றி அடையும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நல்ல மருத்துவமும், மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கும். வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு சொந்த தொழில் தொடங்கும் யோகம்.
தொழில் தொடங்கும் யோகம்
தனிப்பட்ட தொழிலைத் தொடங்கி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த பல விஷயங்கள் நடைபெறும் நல்ல காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். ஏற்றம் மிகுந்த காலகட்டம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். பாதிப்புகள், சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகத்தில் நல்ல விதமான விஷயங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
சங்கடங்கள் தீரும்
வேற்று மொழி, மதத்தினரால் அதிகளவில் ஆதாயம் ஏற்படும். வேலையில் மாற்றத்துக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். அரசு கெளரவங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். உங்களை ஒதுக்கி வைத்தவர்களே பெரிய பொறுப்பைக் கொடுக்கக் கூடிய அமைப்பு ஏற்படும். மனதை தளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு அனுகூலத்தைத் தரும். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இருப்பது நன்மையைத் தரும். எடுத்த காரியங்கலில் ஜெயம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சிவகாயத்ரி மந்திரத்தைச் சொல்வது, ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்வது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications