Rasi Palan This Week: கடக ராசிக்கு குருவின் அருளால் கிடைக்கும் வெற்றி.. தொட்டது துலங்கும் நேரம்

Subscribe to Oneindia Tamil

Kadagam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.[Kadagam rasi palan]

kadagam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-from-march-9-to-15

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)

கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமத்தில் ஏராளமான கிரகங்கள் இருப்பது தேவையில்லாத ரணகளம், பேச்சு, விரோதம், வாக்குவாதம், போக்குவரத்து போன்றவை ஆரம்பத்தில் ஏற்படும். குரு வக்கிர நிவர்த்தி அடைந்து பார்வை பலத்தைக் கொடுப்பதால் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். உழைப்பு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்பிக்கை ஏற்படும்.

திட்டமிடல்

எதிர்பாராத வெற்றிகள் உண்டாகும். எதிர்பாராத பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அஷ்டமத்துக்கு குரு பார்வை இருப்பதால் பஞ்சாயத்துகள், செட்டில்மெண்டுகள் உங்களுக்கு சாதகமாக முடியும். திட்டமிட்ட காரியங்கள் அற்புதமாக நடக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.

இரவு நேர பயணம்

இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத வெளியூர், வெளிநாடு பயணம் உண்டாகும். திடீர் திருமணம் உறுதியாகும் அமைப்பு உள்ளது. பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். புதிய அறிமுகத்தில் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள், வெளியிடங்களுக்கு செல்லும் இடத்தில் அறிமுகமாகும் நபர்களிடம் கவனம்.

கவனம்

தாய், தந்தை உடல்நிலையில் கவனம் தேவை. பூர்வீகம் தொடர்பான விஷயத்தில் கவனம். மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் வழிபாடு மன அழுத்தத்தை தீர்க்கும். நிம்மதியையும், ஆனந்தத்தையும் கொடுக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். சிறு சிறு தடைகள் காணப்படும்.

பரிகாரம்

பசு மாடுகளுக்கு வியாழக்கிழமை தோறும் உணவு கொடுப்பது தடைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும். பெற்றோருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும். பெற்றோர் விஷயத்தில் கவனம் தேவை.

பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+