கடக ராசியை வச்சு செய்யும் வக்கிர சனி.. பழகும் ஆண், பெண்ணால் வரப்போகும் ஆபத்து.. பேச்சில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Sani vakra peyarchi Kadagam

சனி வக்கிரம்

ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடையதை இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்

சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.

சனியின் தாக்கம்

துப்புரவுப் பணியாளர்கள், உடல் சார்ந்த வேலைகளை செய்பவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சனியின் மூலமாக வேலையில் ஏற்றம், வேலை மாற்றம், அரசியலில் செல்வாக்கு பெறுவது சனி பகவானால் தான். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் சனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சனி வக்கிரகதி அடைவதாலும், குருவின் பார்வை இருப்பதாலும் அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் விமானங்கள், ரயில்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி பலன்

புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது கடக ராசி. ராசியின் அதிபதி சந்திர பகவான். உங்கள் ராசிக்கு சனி 8 ஆம் இடத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத பழக்க வழக்கங்கள் இருக்கும். எதிர்பாலித்தனவரால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும். கூட்டுத் தொழில் பாதிப்பு உண்டாகும்.

வேலையில் மாற்றம்

வேலையில் மாறுதல்கள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்துக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்படும். வேலையில் நடக்கும் மாற்றங்களால் ஏற்றம் பெறுவீர்கள். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. அலைச்சல்கள் அதிகரிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியின் நாலரை மாத காலகட்டத்தில் முதல் ஒன்றரை மாதங்கள் உங்கள் ராசிக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். தூக்கமின்மை ஏற்படும். அலைச்சல்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும்.

தொழிலில் லாபம்

செய்யக்கூடிய தொழிலில் அதிக லாபம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. லாபத்தில் பின்னடைவு ஏற்படும். புதிய தொழில்களுக்கு முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினத்தவரை நம்பாமல் இருப்பது நன்மை பயக்கும். மூன்றாவது ஒன்றரை மாதத்தில் தொழிலில் மாறுதல்கள் வரும் வாய்ப்பு ஏற்படும். செய்யும் தொழிலில் பின்னடைவு, கடன் வருவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற சகவாசங்கள் ஏற்படும்.

வெளிநாடு

வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கைகூடாது. பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 10 ஆம் இடத்தை வக்ர சனி பார்ப்பதால் தொழிலில் பாதிப்பு, மாற்றம் ஏற்படும். 2 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் தொழிலில் பண வரவு குறைவாக இருக்கும். மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த மரியாதையுடன் பேசுவது நல்லது. அரசாங்கம், நிர்வாகத்திடம் இணக்கமாகச் செல்வது நல்லது.

வழிபாடு

உங்கள் ராசிக்கு குழந்தைகள் மூலமாக சிறு சிறு தொல்லைகள் வரும். 5 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் பதவி, புகழ், அந்தஸ்தில் பின்னடைவு ஏற்படும். குற்றாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பாதாள சனீஸ்வரரை வழிபட்டு வருவது, நல்லெண்ணையை சனிக்கிழமை தோறும் தானமாக அளிப்பது நன்மையை ஏற்படுத்தும். துப்புரவுப் பணியாளர்களுக்கு, கடின உழைப்பாளர்களுக்கு இரும்பு, தோல் பொருள்களை தானமாக கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+