Rasi Palan This Week: கடக ராசிக்கு யோகம் கொட்டும் காலம்.. ஆனா வாயினால் தான் பிரச்சனையே
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் காலகட்டம். இதுவரை எந்த காரியங்களை தொட்டாலும் அது இழுபறியாகிக் கொண்டே இருந்திருக்கும். இனி அந்த நிலைமை படிப்படியாக மாறும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைக் குவிப்பீர்கள். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. யாருடன் பேசினாலும் மிகுந்த கவனமாகவும், கணிவாகவும் பேசுவதும் நல்லது.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சுபிக்ஷங்கள் அதிகரிக்கக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும். புதிதாக நல்ல பதவிக்கு வரக்கூடிய பிராப்தம் ஏற்படும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் உண்டாகும்.
கடன் தீரும்
தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். முதலீடுகள், வீடு, நிலம் போன்றவற்றை விற்றாவது உங்கள் கடன் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்ந்தப்பட்ட விஷயங்களில் உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் கூட உங்களைத் தேடி வந்து உங்களிடம் பெரிய பொறுப்புகளைக் கொடுப்பார்கள்.
முன்னேற்றம் வளர்ச்சி
இனிமேல் ஒதுங்கிக் கொண்டிருந்த நீங்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. நல்ல முன்னேற்றங்களும் வளர்ச்சியும் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களை அடுத்தடுத்து செய்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் தடைப்பட்டிருந்த அனைத்து விஷயங்களும் இனி நிவர்த்தியாகி அடுத்தடுத்து நல்லவை நடக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புகள் தேடி வரும். பணம் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் நல்ல காலகட்டமாக இருக்கும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு சகல விதத்திலும் ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications