கன்னி ராசிக்கு குட்நியூஸ் குவியும்.. திருமணம், சொத்து, பதவி உயர்வு என அடுத்தடுத்து யோகம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-rasi-palan-kanni-rasi-will-get-massive-growth-in-this-week

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருக்கிறார். மங்கள காரியங்கள் நிறைந்திருக்கும். திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளது. வீட்டில் திடீரென ஒருவர் பிரபலமாகும் வாய்ப்பு ஏற்படும். சந்தோஷமான நிகழ்ச்சி நடக்கும். குடும்ப வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரும் வாய்ப்புள்ளது. பதவி உயர்வு கிடைப்பது, பேரக் குழந்தைகள் பிறப்பது, உங்களுக்கே திருமணம் நடப்பது போன்ற யோகம் உள்ளது.

நீண்ட நாட்களாக காத்திருந்த காரியங்கள் எளிமையாக முடியும். வீடு, சொத்து, வாகனம் வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. கன்னி ராசிக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விரயத்தில் சூரியன், புதன், கேது இருப்பதால் ரகசியமாக பல காரியங்களை செய்து முடிக்கும் நேரம் உள்ளது. வெளிநாடு செல்லதும் அனுகூலம் காணப்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.

குட்நியூஸ் வரும்

கழுத்து, தொண்டை பகுதிகளில் கவனம் தேவை. சிலருக்கு சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் காணப்பட்டிருந்த அந்நியோன்ய குறைபாடு பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடை நீங்கும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும்.

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் யோக பலம் ஏற்படும். வண்டி, வாகனத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பலவிதமான முயற்சிகளால் சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். பெரிய நிம்மதிகள் உண்டாகும். எதிர்பார்க்காத நிறைய விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். கோபப்படுவது, வருத்தப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

சுபவிரய பாக்கியம்

பிள்ளைகள் விஷயத்தில் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். துணை விஷயத்தில் சுபவிரய பாக்கியம் உண்டாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய வேளையில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது நன்மைகளை ஏற்படுத்தும். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் ஏற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

முக்கியமான புத்தகம் பரிசாக கிடைக்கும் அமைப்பு உள்ளது. சிலர் உங்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் ஏற்படும். காமாட்சியம்மன் வழிபாடு சகலவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். விஷ்ணு காயத்ரி படிப்பது, விஷ்ணு வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+