Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பண மழை கொட்டப் போகுது.. சொத்துகளை குவிக்கும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 3 ஆம் இடத்தில் புதன் அமர்வதால் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். 3 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளியூர், வெளிநாடு பிரயாணம் உண்டாகும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். முக்கியமான இன்டர்வியூக்கள் மூலம் கால் லெட்டர்கள் வரும். நல்ல வார்த்தைகள் கிடைக்கும். நல்ல தகவல்கள் உங்களைத் தேடி வரும்.
பணவரவு
வரவேண்டிய பணங்கள், செக்குகள் வந்து சேரும். கம்யூனிகேஷனில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எலக்ட்ரிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி வாகனங்களில் பழுதுகள் வரும் வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் நடக்கும் விஷயங்கள் அவ்வளவு சரியாக இல்லாமல் இருக்கும் என்பதால் கவனம் தேவை.
அக்னியில் கவனம்
வீட்டில் அக்னி தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. ரத்தபந்த உறவுகள், நிலத்தில் பிரச்சனை என்பது போன்ற வாரமாக இருக்கும். பிபி, சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை. இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
மாற்றம் முன்னேற்றம்
வாகனத்தில் மாற்றம், வீடு மாற்றம், நிலம் மாற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். எதிரிகள் விஷயத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் அதீத கவனமாக இருக்க வேண்டும். விட்டமின் டி, கேல்சியம் தொடர்பான பிரச்சனைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
வேற்று மொழி மனிதர்கள், வேற்று மதத்தினரால் அதிகமாக பயணங்கள் ஏற்படும். அதனால் நல்ல யோகமும் ஏற்படும். சந்தோஷத்தையும், ஏற்றத்தையும், நிம்மதியையும் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றங்கள், யோகங்கள் ஏற்படும். நவக்கிரகத்தில் உள்ள சனி பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications