Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. இதுல மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அலர்ஜி, மூட்டு வலி, சளி தொந்தரவு, சுவாசக் கோளாறு போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கண்களில் வரும் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என எந்த மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.
எதிர்பாலினத்தவரிடம் கவனம்
ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் படிப்படியாக மாறும். வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லத. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை.
தொழில்
எதிர்பாலினத்தவரால் தேவையில்லாத பதட்டமும், மனவருத்தமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் ரீதியாக எந்தவொரு பாதிப்புகளுக்கும் ஆளாகாமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் பொறுமை, அமைதி காப்பது நல்லது.
வேலையை விடுவதில் கவனம்
கன்னி ராசியினர் கண்டிப்பாக உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேப்பர் போடுவது, வேலையை விடுகிறேன் என்று அவசரப்படாமல் இருப்பது நல்லது. வேலையை விட்டு விட்டு தொழில் ஆரம்பிப்பவர்கள் அந்த தொழில், தொழிலுக்கான பணம், அதில் நிபுணத்துவம் பெற்றிருப்பவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு தொழில் ஆரம்பிப்பது நன்மை பயக்கும். கோபத்தில் தொழிலை ஆரம்பித்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
வாகன அமைப்பில் நல்ல மாற்றங்கள், நன்மைகள் ஏற்படும். அசையும் அசையா பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாழக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு, தாயார் வழிபாடு, நரசிம்மர், அனுமன், மகாலட்சுமி வழிபாடு போன்றவற்றை செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications