Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு பட்டையை கிளப்பும் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

kanni-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-karthigai-month

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.

பரிகாரம்

கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் எப்போது வந்தாலும் உங்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். சுபவிரயங்களை செய்து மகிழ்வீர்கள். இடமாற்றங்கள் கிடைக்கும். உத்தியோக மாற்றங்கள் உண்டாகும். பதவி உயர்வு, அரசாங்க கெளரவம் என நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும் நல்ல காலகட்டம்.

சம்பள உயர்வு

நீண்டநாட்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பணத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும். குரு அதிசாரத்தில் இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் ஏற்றங்கள் காணப்படும்.

திருமண தடை நீங்கும்

பிள்ளைகளின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் யோகம் ஏற்படும். திருமண பாக்கியம் உண்டாகும். நல்ல வரன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாதவர்கள் கூட திருமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டாகும்.

மாற்றம், முன்னேற்றம்

இடமாற்றம், தொழில் மாற்றம், புதிய கெளரவங்கள் ஏற்படும். மலைக் கோயில்களுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். யாத்திரைகள் செல்வீர்கள். சுவாமிகளுக்கு மாலை போடுவீர்கள். பெருமாள், தாயார், கிருஷ்ணர், விஷ்ணு, நரசிம்மர் வழிபாடு என்று பெருமாளைச் சார்ந்த வழிபாடுகள், ஐயப்பன் சார்ந்த வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.

ஆரோக்கியம்

அலர்ஜி, சளி தொந்தரவு, காது, மூக்கு, தொண்டை, விட்டமின் டி குறைபாடு, கேல்சியம் குறைபாடு போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஹார்மோன் குறைபாடுகள் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புள்ளது. வலுக்கலான இடங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் கவனம் தேவை. நல்ல நேரம், நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+