Masi Matha Palan: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. கன்னி ராசிக்கு பிரம்மாண்ட ஜாக்பாட்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு (Kanni Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு, பகை எல்லாமே பூஜ்ஜியமாகக் கூடிய நேரம். முதலமைச்சர் கூட ஆகும் அளவுக்கு உங்களுக்கு யோகமான காலகட்டம். உங்கள் ஊரில் பெரிய பொறுப்புகள், பதவிகளுக்குச் செல்வீர்கள். பெரிய ஆட்களை சந்திப்பது, சாப்பிடுவது போன்ற யோகம் உண்டாகும்.
குரு பார்வை
குருவுடைய பார்வை பலம் இருப்பதால் நினைத்துப் பார்க்க முடியாத ஏற்றம் உண்டாகும். பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைக்கும் யோகம் உண்டாகும். பெரிய பொறுப்பு, பெரிய பணம் வந்து சேரும். பெரிய லோன்களும் ஈஸியாக கிடைக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். பெரிய ஹோட்டலில் தங்குவது, பெரிய மருத்துவமனைகளில் வேலை கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும்.
வெற்றி
எதிரிகள் உங்களைக் கண்டு அச்சப்படும் சூழல் ஏற்படும். அதனால் அவர்களை எளிதில் வெற்றி பெறுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் காரியம் ஆக வேண்டியது இருந்தால் அதில் சில அலைச்சல்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் கூட உங்களுக்கு எதிராக வருவார்கள். ஆனால் அவர்களை எளிதில் வெற்றி கொள்வீர்கள்.
ஆரோக்கியம்
எதிர்பாராத பெரிய விஷயங்கள் பரிசாக கிடைக்கும். நிறைய விஷயங்கள் பாசிட்டிவாக நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தைரியமாக, நம்பி எல்லா விஷயங்களையும் செய்து வெற்றி அடைவீர்கள். வயிறு, அல்சர் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி சகலவிதத்திலும் கன்னி ராசியினருக்கு ராஜயோகமான காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். ஏற்றம் பெறும் காலகட்டம். பிரித்யங்கரா தேவியை வழிபாடு செய்வது நல்ல அனுகூலத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications