Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kanni: கன்னி ராசிக்கு இனி ஏறுமுகம் தான்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி யோகம்

Subscribe to Oneindia Tamil

March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கன்னி ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Kanni]

kanni-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-march-month

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி மார்ச் மாத பலன்

கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும் அற்புதமான காலகட்டம். 6, 11 ஆம் இடங்கள் வலுத்து இருக்கின்றன. 10 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். 6 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மாதம் முழுவதும் அதே இடத்தில் இருக்கிறார். உங்களுடைய ராசிநாதனும் 6 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் இருக்கிறார். மாதத்தின் இறுதியில் 15 ஆம் தேதிக்குப் பிறகு உச்ச சுக்கிரன் ராசியைப் பார்க்கிறார் என்பது பெரிய அளவில் நன்மைகளைக் கொடுக்கும்.

தொல்லை தீரும்

நண்பர்களால் இருந்து வந்த தொல்லை தீரும். கூட்டுத் தொழில் சரியாக இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி தொழில் நன்றாக இருக்கும். நண்பரை நம்பி தொழில் தொடங்கி ஏமாந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள். பங்குச்சந்தையில் சிக்கிக் கொண்டது என பணம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். புதிய நம்பிக்கை, உத்வேகம் பிறக்கும் காலகட்டம்.

தொழில்

10 ஆம் இடத்தில் உயர்நிலை அமைப்பில் குரு இருப்பது விவசாயப் பெருமக்கள், வியாபாரிகள், தொழில் முனைவோருக்கு ஆதரவு கிடைக்கும். 1, 2 வருடத்திற்கு சனியைத் தவிர மற்ற கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. தொழில் முனைவோருக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான ஆர்டர்கள் இந்த மாதமே கிடைக்கும்.

சுறுசுறுப்பு முக்கியம்

எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக வேலை செய்கிறீர்களோ அதற்கேற்ப ஆர்டர்கள் பிடிக்கும் காலகட்டமாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய சிந்தனைகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. 6 ஆம் அதிபதி சுக்கிரனோடு சேர்ந்திருக்கிறார். 8 ஆம் அதிபதி குருவின் பார்வையில் சேர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களுக்கு பணம் மீண்டும் வரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

லாபங்கள் கொட்டும்

லாபங்கள் எந்த இடத்தில் கிடைக்கும் என்பதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பிக்கும். எதிரியால் லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் எல்லாமே உங்களுக்கு சாதகமாக முடியக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். சீருடைப் பணியாளர்களாக இருக்கும் அனைத்து கன்னி ராசியினருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் இப்போது உண்டாகும்.

சம்பள உயர்வு

காவல் துறையில் வேலை செய்பவர்கள், ராணுவத்தில் இருப்பவர்கள், செக்யூரிட்டிகளுக்கு இந்த மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் நல்ல மாதமாக இருக்கும். கையில் பணம் தங்கக்கடிய மாதமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+