Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. பிளான் பண்ணி சாதிக்கும் யோகம்
Kanni Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நிலப் பத்திரங்கள், வீட்டு பத்திரங்கள் கிடைக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். குறிப்பாக, செஸ், தடகள வீராங்கணைகளுக்கு வெற்றிகள் குவியும். நிறைய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் கட்சிகளில் இணைவதற்கான பாக்கியம் ஏற்படும். எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயித்து காமிப்பீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
மன வருத்தங்கள் நீங்கும். எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தள்ளிப் போகிறதே என்று கவலையே படாதீர்கள். கண்டிப்பாக அதுபோன்ற விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும் யோகம் உண்டு. திட்டமிட்டு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசியல் செய்வீர்கள். குடும்பத்திலேயே உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நடக்கும்.
ஆரோக்கியம்
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், வேலை போகும் சூழல் உண்டு. எல்லா இடங்களிலும் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. பழைய கடன்கள் தீரும். எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு. கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.
முதலீடுகள்
வெளியிடம், வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது ஏற்றத்தைக் கொடுக்கும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. பதவி உயர்வுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவது நன்மை பயக்கும். பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களைப் பெறும் யோகம் உண்டு. வண்டி, வாகன மாற்றம் ஏற்படும்
வழிபாடு
கன்னி ராசிக்கு அற்புதமான நேரமாக இருக்கிறது. நம்பிக்கை அதீதமாக இருக்கும். மன உறுதி உண்டாகும். சமயோஜிதமாக செயல்படக்கூடிய திறன் ஏற்படும். வெங்கடாசலபதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடின உழைப்பை போடுவது நல்லது. சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications