Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. லாபம் கொட்டும் நேரம்.. என்ஜாய்
Kanni Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பதவிகள் தானாகத் தேடி வரும். பெரிய பொறுப்புகளுடன் கூடிய பதவிகள் கிடைக்கும். நீங்கள் இஷ்டப்பட்டு செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்திலும் ஜெயிப்பீர்கள். உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நிறைய பேருக்கு பெரிய பெரிய வெற்றிகள் கிடைக்கும். நிறைய ஏற்றங்களும், மன மாற்றங்களும் ஏற்படும். சந்தோஷங்களைப் பார்க்கக்கூடிய காலகட்டம்.
கடன் கிடைக்கும்
கடன் கண்டிப்பாக வாங்குவீர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நிறைய விருதுகள், அங்கீகாரம் போன்றவை கிடைக்கும். லாபங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் சனி, சந்திரன் நேரடியாக பார்வை படுவதால் இந்த வாரத்தின் கடைசி 2, 3 நாள்கள் நன்றாக இருக்கும். உணவு, மெடிஷன், கல்லூரி, டியூஷன் போன்ற அனைத்து விஷயங்களிலும் அற்புதமான வெற்றிகள் கிடைக்கும்.
யோக பலன்கள்
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். எல்லா விதமான தடைகளும் தீரும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். ஏற்றம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். மனம் விட்டுப் பேசுவது யோக பலத்தை அதிகமாகப் பெற்றுத் தரும்.
முன்னேற்றம்
அரசுத் துறை, அரசியல்வாதிகள் திடீரென செல்வாக்குகள் பெறக்கூடிய காலகட்டம். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். உங்களுடைய முடிவுகள் அனைவராலும் பாரட்டப்படக் கூடிய அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். தொடர்ந்து இருந்து வந்த சங்கடங்கள், தடைகள், தொழில் முன்னேற்றம், உத்தியோகம், வியாபாரம், படிப்பு முன்னேற்றமும் ஏற்படும்.
வழிபாடு
வாகனங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். நல்ல காலங்கள் கூடி வரக் கூடிய காலகட்டம் என்பதால் மேலதிகாரிகள் விஷயத்தில் வாக்குவாதம் செய்து சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் ஸ்ரீ ராமசந்திரர் வழிபாடு அனுகூலத்தைத் தரும். சந்தோஷமும்,பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications