Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. பண வரவு சூப்பராக இருக்கும்
Kanni Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நல்ல பலன்கள் அபரிமிதமாக கிடைக்கக் கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் கிடைக்கும்.
நல்ல செய்தி
ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகளில் ஏற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் துணைக்கு சிறு சிறு குறைபாடுகள் தேக ஆரோக்கியத்தில் ஏற்பட்டாலும் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நன்மை பயக்கும்.
ஜெயம்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் ஏற்படும். ரத்தபந்த உறவுகளுக்கும், தாய் வழி, தந்தை வழி உறவுகளுக்கும் இருந்த போராட்டங்கள் எல்லாம் நண்பர்கள், உறவினர்களால் பஞ்சாயத்து பேசி, சுமூகமாக முடிக்கும் சூழல் ஏற்படும். அந்நியோன்யம் அதிகரிக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சளி தொந்தரவு, அலர்ஜி, கண் வலி போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
புதிய வாகனங்கள்
வாகனத்தில் அதிக மாற்றங்கள் செய்வது நன்மை பயக்கும். புதிய வாகனங்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் நல்ல யோகங்கள் உண்டு. எல்லா வகையிலும் யோகம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்களில் ஏற்றம் உண்டாகும்.
கடன் நீங்கும்
கடன் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். அதனை அடைத்து முடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கன்னி ராசியினருக்கு பெருமாள் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications