Rasi Palan This Week: கன்னி ராசிக்கு அடிச்சது யோகம்.. பண மூட்டையை அள்ளும் நேரம்
Kanni Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும்.
வாக்குவாதம்
குடும்பத்தில் துணை விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள், பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொலைதூரப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மனதளவில் இனம்புரியாத ஒரு சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.
பணவரவு
துணை சொல்வதை கேட்டுக் கொள்வது முக்கியமான அமைப்பாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இழுபறியாக இருந்த நிலைமைகள் ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் மாற்றம் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. பெரிய பண வரவு உண்டாகும். மனைவி, கணவன் மூலமாக பண வரவு ஏற்படும்.
வேலைவாய்ப்பு
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எந்த விஷயத்தையும் எளிமையாக நடத்தி முடிக்கும் காலகட்டம். பெரிய வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். சுக்கிரனின் பார்வை இருப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வழிபாடு
பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளும் நேரம். உடம்பில், உங்கள் அழகில் அக்கறை செலுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அலர்ஜி, கால் பாதம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பெருமாள் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும். குலதெய்வ பிரார்த்தனை செய்வது மிகவும் முக்கியம். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 85 சதவீதமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications