Rasi Palan This Week: கன்னி ராசி பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. பொறுமை ரொம்ப அவசியம்
Kanni Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Kanni rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு காது, மூக்கு, தொண்டை தொடர்பான விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சனிக்கு தீபமேற்றுவது நல்லது. துணை விஷயத்தில், அவர்களுடைய தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொறுமை அவசியம்
அதேபோல, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிறு சிறு சஞ்சலங்கள் காணப்படும். அவசரப்பட்டு வேலையில் பேப்பர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் உங்கள் மேல் தவறில்லை என்றால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆவேசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
நன்மைகள்
எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும். 12 ஆம் தேதி வரை பொறுமை, அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் பேசினால் பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை என இருந்ததெல்லாம் இந்த மாதத்தோடு முடியும். இனி எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுபடும் காலகட்டமாக இருக்கும். சனி, சூரியன், சுக்கிரன் பார்வை கிடைக்கும்போது சிறு சிறு பிரச்சனைகள் வரும்.
பொறுப்புகள்
கன்னி ராசிக்கு இனி அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெரிய விஷயங்கள் எல்லாம் எளிமையாக முடியும். எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சில முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு எடுக்காமல் யோசித்து எடுப்பது நல்லது.
வழிபாடு
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எல்லா காரியங்களும் அற்புதமாக நடக்கும் யோகம் உண்டாகும். தூக்கமின்மை நீங்கும். 12 ஆம் வகுப்புக்குப் பிறகு நன்றாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். அருணாசலேஸ்வரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications