Kanni: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. வாயில தான் கண்டமே
Kanni Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா காரியங்களிலும் ஜெயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் காணப்படக்கூடிய அற்புதமான காலகட்டம்.
சிக்கல் தீரும்
குடும்பத்தில் எந்தவித வருத்தங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டாளிகளுக்கும், உங்களுக்கும் பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது ஏற்றத்தைக் கொடுக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். செல்வாக்குகள் கூடும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும்.
முன்னேற்றம்
உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள், உடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பார்கள் என்பதால் கோபப்படுவது, கெட்ட வார்த்தைப் பேசுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் படிப்படியாக மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். முகத்தில், வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பல் பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும்.
வழிபாடு
வீட்டில் கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் வெற்றி ஏற்படும். பெரிய பண வரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய நன்மைகள் ஏற்படும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராதாகிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications