Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் விலை உயர்வு, நிலச்சரிவு, பெரும் மழை பாதிப்பு.. கார்த்திகை மாதத்தில் வரப்போகும் மாற்றங்கள்?

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் உலகில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன, இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுமா, உலகப் பிரச்சனைகள், போர் பதற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

karthigai-matha-palan-look-at-the-changes-that-will-occur-in-the-world-during-the-month-of-karthigai

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.

பரிகாரம்

கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும்.

பிரச்சனைகள் வரும் வாய்ப்பு

தென்னிந்தியா முழுவதும் பல்வேறு சிக்கல்கள், பிரச்சனைகள் ஏற்படும். திருமலை திருப்பதி, பழனி மலை, சபரிமலை போன்ற பிரதான கோயில்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டத்தால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அதே போன்று பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

அணை பாதுகாப்பு

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குற்றாலம், பொள்ளாச்சி, நாகை, வேளாங்கண்ணி, திருப்பூர், தென்காசியில் மழையின் அளவு மிக அதிகமாக இருக்கும். பூண்டி போன்ற அனைத்து நீர்த்தேக்கப் பகுதிகளிலும் அணையின் பாதுகாப்பை மேம்படுத்தும் அவசியம் ஏற்படும். அணையில் நீர்க்கசிவு, மதகுகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு

காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற புண்ணிய தீர்த்தக் கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலத்த வேண்டிய அவசியம் ஏற்படும். வடநாட்டில் காசியில் பிரச்சனைகள் வரலாம். அதேபோல, ராமரின் அயோத்தியாவிலும் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு கடுமையான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

வெளிநாட்டில் வசிப்போர்

வேலைகளுக்குப் பிரச்சனைகள், உடமைகளுக்கு, உயிருக்கு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தலைவர்களின் தூண்டுதல் ஏற்படும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இலங்கையில் உள்ள தொழில் வர்த்தகங்கள் கவனமாக இருக்க வேண்டும். அண்டை நாடுகளால் பாதிப்பு ஏற்படும் மாதம். அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு தொந்தரவு வரக்கூடும்.

மழை பாதிப்பு

வடநாட்டு காசியில் பிரச்சனைகள் வரும். சென்னைக்கு பெரிய மழை பாதிப்பு ஏற்படும். எல்லா வடிகால்களையும் தூர்வாருவது நல்லது. அரசு, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு, பிரபலங்களுக்கு, நாட்டை ஆளக்கூடியவர்களுக்கு தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், பிரபலமான தொழிலதிபர்களுக்கு எதிரிகளால் தொந்தரவு, வாகன விபத்து போன்றவை ஏற்படும்.

நிலச்சரிவு அபாயம்

பிரபலமான பெண் தலைவர்கள் கவனம் தேவை. ஊட்டி, குன்னூர், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும். பட்டாசு குடோன்களில் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மாலத்தீவில் நிலநடுக்கங்கள் ஏற்படும். காற்றால் பெரிய சேதங்கள் ஏற்படும். பெங்களூரில் கலவரம் ஏற்படும். மீனவர்களுக்கு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. கடல் எல்லை பிரச்சனையில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

தங்கம் விலை

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பெரிய கலவரங்கள், பிரச்சனைகள் போர் மேகங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் தலைவர்கள், ரஷ்ய தலைவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+