Karthigai Matha Palan: 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

Karthigai month Palan: விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய சிறப்பு மிகுந்த கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் எவை, அந்த ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும்.

karthigai-matha-palan-which-5-zodiac-signs-will-get-good-benefits-and-fortunes-during-this-month

கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அதிஅற்புதமான மாதமாக இருக்கும். கடந்த காலங்களில் இழந்தவற்றை இந்த முறை மீட்பீர்கள். சொந்த வீடு கனவு நனவாகும். நிலம், வீடு, வண்டி, வாகனம், தங்கம், வைரம், வெள்ளி நகை உள்ளிட்ட அசையும், அசையா சொத்து சேர்க்கை உண்டு. உங்கள் மனதிற்கு பிடித்தபடியான வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

குழந்தைகள் விஷயத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு வீடு தேடி நல்ல செய்தி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கலை, ஊடகம் துறையினருக்கு விருது உள்ளிட்டவை தேடி வந்து பெயர், புகழ் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் ராசியில் சூரியன் வந்திருக்கிறார். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செல்வது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் உணவு தானமாகக் கொடுப்பது மேன்மையைத் தரும். உத்தியோகம், வாகனம், இன்கம்டாக்ஸ், ஜிஎஸ்டி போன்றவற்றில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி உங்கள் காரியத்தை விட்டு விடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை.

வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஸ்டார்ட் அப் தொழிலில் அமோகமான வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. எதிர்பாலினத்தவர் விஷயத்தில் கவனம் வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு ரணங்களை குறைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகளவிலான யோக பலன்கள் கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்ள் ஏற்படும். தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த பதட்டங்கள் குறையும். தாய், தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

முருகர் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சுப்பிரமணி புஜங்கம் கேட்பது ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பெற்றோர்களுக்கு ஏற்றம் ஏற்படும். அவர்கள் உங்களைத் தாங்கி நின்று, உங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பார்கள்.

பெரிய அளவுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நல்ல யோக பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கோளார் பதிகத்தை கேட்டுக் கொண்டே இருப்பது நல்லது. வேண்டியவை எல்லாம் நடக்கும் காலகட்டம். உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதிர்ஷ்டம் செய்தவர்கள் சிம்ம ராசியினர். இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருப்பது நல்லது. சிந்தனையை தெளிவாக வைத்துக் கொள்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இனி நல்லது மட்டுமே நடக்கும் காலம். புரட்சி செய்து, சண்டை போட்டு காரியத்தை ஜெயிப்பீர்கள். நிறைய ரூல்ஸ்களை ஃபாலோ செய்து கொண்டிருப்பீர்கள். அவை எல்லாம் முடியும் காலகட்டம். பழைய விஷயங்கள், நட்புகள், கணக்குகள், உறவுகள், பழைய வேலைகள் எல்லாம் தேடி வரும் காலகட்டமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். அரசியலில் பெரிய மாற்றங்கள் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு.

4 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வீடு அமையக் கூடிய பிராப்தம் உண்டாகும். நிலபுலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சுபவிரயங்கள் கைகொடுக்கும்.
எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனி டக்கு டக்கென்று நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், தொழில், வேலை, படிப்பு, வெளியிடம் என எல்லா விஷயங்களும் அற்புதமாக இருக்கும். சுபகாரியங்கள் அதிகளவில் நடக்கும். பதட்டம் எல்லாம் நீங்கும். மன அழுத்தம் பரிபூரணமாக நீங்கும். பரம்பரை தொழில் செய்பவர்கள் நிறைய ரிஸ்குகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது.

துர்க்கை வழிபாடு நல்ல ஏற்றத்தை தரும். பெண் தெய்வ வழிபாடுகள் ஏற்றத்தை தரும். வாராஹி சூழினி, பிரித்யுங்கரா, சர்பேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்து அற்புதமான பலன்களைத் தரும். எல்லா விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். பெரும் பணம் பார்க்கும் யோகம் உண்டாகும். பயணங்கள் சமயத்தில் கவனம் தேவை. ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+