தனுசு ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. வேலை பிரச்சனைக்கு குட்பை

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-dhanusu-rasi-people-get

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு 9, 12க்கு உரியவர்கள் நல்ல இடத்தில் உள்ளனர். லாபாதிபதி 11 ஆம் இடத்திலேயே சுபராகி லாபத்தில் இருக்கிறார். 9 ஆம் இடத்தில் ராசிநாதன் மாறி ராசியைப் பார்க்கிறார். பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். காசு, பணத்திற்கு எந்தவித தடையும் இருக்காது. எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பணவரவு அற்புதமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து நல்லவிதமாக பணம் வந்து சேரும். உங்களுடைய இனம், மதத்தைச் சேராத நபர்கள் மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். எல்லாவற்றிலும் முழுமையான நிறைவுகள் இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும்.

பாக்கியம்

எதிர்கால லட்சியங்கள் தீர்மானமாகும். பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளால் யோகம் உண்டு. அப்பாவின் உடல்நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சொந்த ஊரில் இருக்கும் சில விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.

முன்னேற்றம்

சொந்த ஊர் சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்கும் காலகட்டம். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி அனைத்தும் உங்களுக்கு சாதகமான அமைப்பில் உள்ளது. பெரியளவில் சோதனைகள் கிடையாது. அடுத்தடுத்து வரக்கூடிய அமைப்பில் அஷ்டமசனி வருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.

பதவி, சம்பள உயர்வு

கெளரவம், அந்தஸ்து கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி கிடைக்கும். அந்தப் பதவியை திறம்படச் செய்யக்கூடிய தன்மை ஏற்படும். வியாபாரத்தில் உயர்வு, தொழிலில் நன்மைகள் கிடைக்கும். தொட்டது துலங்கக்கூடிய தன்மை ஏற்படும். எல்லாவற்றிலும் நல்லவற்றை எதிர்நோக்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

நிம்மதி

தனுசு ராசி பெண்களக்கு இதுவரையில் இருந்து வந்த மன அழுத்தம் விலகும். புதிய வேலைகள் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நிம்மதி பெறக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+