சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்.. சொந்த வீடு, கார்னு செட்டிலாகும் யோகம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், கடகம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Karthigai Matha Rasi Palan 2026

கடகம் ராசி பலன்

கடகம் ராசியினருக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய மாதமாக இந்த கார்த்திகை மாதம் அமையும். 7, 1க்கு ராகு கேது மாறுகிறது பெரிய மாற்றத்தைத் தரும். குருவும், செவ்வாயும் தன வீட்டில் சேர்ந்திருக்கின்றனர். மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே பண வரவு அற்புதமாக இருக்கும். 5 ஆம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தை, யூக வணிகத்தில் நல்ல வருமானம் வரக்கூடும்.

சுக்கிரன் அருள்

குடும்பத்தில் அமைதி ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில், கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து போய்விடலாம் என்று நினைத்தவர்களுக்கு மனமாற்றம் ஏற்படும். பிரிந்து வாழ்வதை விட, சேர்ந்து வாழ்வது நல்லது என்கிற எண்ணம் ஏற்படும். 4 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுத்திருக்கிறார். தாயின் ஆதரவு, அனுசரணை கிடைக்கும். அம்மாவிடம் இருந்து சம்மதம் கிடைப்பதற்காக காத்திருப்பவர்களுக்கு சம்மதம் கிடைக்கும்.

சொந்த வீடு, வாகன யோகம்

இளைய பருவத்தினருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் சொந்த வீடு, வாகனம், நிலம், கட்டில், மெத்தை, பீரோ போன்றவை வாங்குவதற்கான அமைப்பு ஏற்படும். 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வேற்று மத, மொழி, இனத்தைச் சேர்ந்தவர்களால் நல்லவைகள் நடக்கும். ஆண், பெண் உறவுகள் நன்றாக இருக்கும்.

முன்னேற்றம்

வேற்று மத, மொழி, இனத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்வதற்கான யோகம் உண்டு. இளைஞர்களுக்கு இதுவரை இருந்து வந்த மன அழுத்தம் விலகும். டார்கெட் போன்ற அமைப்பில் இருந்தவர்களுக்கு நல்லவை நடக்கும் யோகம். பணவரவு, பணம் சம்பாதித்துத் தரக்கூடிய மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல மாதமாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+