கும்ப ராசிக்கு கொண்டாட்டம்.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. எல்லாமே இனி ஜெயம் தான்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Karthigai Matha Rasi Palan

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசியினருக்கு அட்டாகாசமான மாதமாக இருக்கும். 7, 10க்கு உடையவர்கள் பரிவர்த்தனை. 7 ஆம் இடத்தில் செவ்வாய், குரு, கேது சேர்ந்து ராசியைப் பார்க்கின்றனர். டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து 6 ஆம் இடத்திற்கு கேது போகிறார். அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு ஜென்மசனி விலகியிருந்தாலும் பெரிய பலன்களை அனுபவித்திருக்க மாட்டீர்கள். ஆனால், 12 ஆம் இடத்திற்கு ராகு போவதால் இனி அந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும்.

வழக்குகளில் சாதகம்

பிரகாசமாக மாறுவீர்கள். நல்ல பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ல மன வலிமை, உடல் வலிமை கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கெளரவம், அந்தஸ்து உயரும். நீதிமன்றம், வழக்கு என்றிருந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சம்பாதிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு இனி நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்.

முன்னேற்றம்

கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதலன், காதலி உறவு, கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக துணை கிடைக்கும் என்கிற தைரியம் ஏற்படும். செழிப்புடன் காணப்படுவீர்கள். 10, 15 ஆண்டுகளுக்கு உங்களை யாரும் அசைக்க முடியாத அளவுக்கு பெரிய அளவுக்கு நன்மைகளைப் பெறுவீர்கள்.

குரு பார்வை

குருவின் பார்வை இருப்பதால் ஏற்றம் ஏற்படும். மனத்திடம் அதிகரிக்கும். குரு ராசியைப் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். வேலை போய்விட்டால் அதை விட நல்ல வேலை, தொழில் கிடைக்கும். புதிய மனிதராகப் பிறக்கும் காலகட்டமாக இருக்கும். எல்லாவற்றையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இனி வாழ்க்கையில் ஒளி பெறக்கூடிய காலகட்டமாக அமையும்.

தொட்டது துலங்கும்

இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள், பஞ்சாயத்துகள் அனைத்தும் நீங்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை பெருகக்கூடிய மாதமாக இருக்கும். தொட்டது துலங்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு. வாழ்க்கையில் இருந்து இருள் சூழ்ந்த நிலைமைகள் எல்லாம் பனிபோல விலகக்கூடிய தன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+