சொல்லி அடிக்கும் மிதுனம்.. பண வரவு கொட்டும்.. கார்த்திகை தரப்போகும் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், மிதுனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-mithunam-rasi-people-get

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக்கூடிய மாதமாக இருக்கும். பாக்கிய ஸ்தானம் அருமையாக இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலம், உங்கள் இனம், மதம், மொழி இல்லாத இடங்களுக்குப் போகக்கூடிய அமைப்பு, இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்லும் அமைப்பு உண்டாகும். ஓரளவிற்கு நல்லவை கூடுதலாக வரக்கூடிய மாதமாக இருக்கும்.

பண வரவு

3 இல் குரு இருப்பது பெரிய அளவுக்கு கஷ்டத்தைக் கொடுக்காது. செவ்வாய் மங்கள காரகனாக 3 ஆம் இடத்தில் இருப்பது சகோதரர்களின் மூலமான யோக பலன்களை அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதரின் அறிமுகம், அவர்கள் உங்கள் சாதகமாக நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பணவரவுகள் அற்புதமாக இருக்கும். கணவன், மனைவி, உறவுகள் விஷயத்தில் இருந்து வந்த கசப்புகள் நீங்கும்.

தொட்டது துலங்கும்

5, 6 வருடங்களுக்கு, அடுத்த ஜென்மசனி வரும் வரைக்கும் துன்பம், துயரம், துக்கம் எதுவும் இல்லாத நிம்மதியான நிலைமைகள் இருக்கும். இந்த மாதம் தொட்டது துலங்கக்கூடிய மாதமாக இருக்கும். தொழில் அற்புதமாக இருக்கும். லாபங்கள் கிடைக்கும். 11 ஆம் இடத்தை குருவும், சுக்கிரனும் சேர்ந்து பார்ப்பதால் அண்ணன், அக்காள் உறவு நன்றாக இருக்கும்.

வளர்ச்சி

தொழிலில் இருந்து வந்த போட்டியாளர்கள் விலகுவார்கள். சட்டப் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும். வழக்குகள், பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில் சுமூகமாக முடியும். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய கடன்கள் வந்து சேரும். ஏதாவதொரு வகையில் தொழில், வீடு கட்டுவது, சொத்துக்கள் போன்றவற்றிற்கு கடன் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

அனுகூலம்

வளர்ச்சிக் கடன்களாக அவை இருக்கும். அதை கட்டுவதற்கான வருமானங்களும் கண்டிப்பாக வரும். பெண் குழந்தைகளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. நல்ல வரன்கள் அமையும். பெண் குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள், கவலைகள் தீரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+