பணக்கார யோகம் பெறும் ரிஷபம் ராசி.. தொழிலில் ஜாக்பாட்.. கார்த்திகையில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-rishabam-rasi-people-get

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் இருந்து புதன் ராசியைப் பார்க்கிறார். மாதம் முழுவதும் ராசிநாதன் வலிமையாக 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து 3 ஆம் இடத்திற்கு கேது நல்லபடியாக மாறி வருகிறார். முயற்சிகள் அனைத்தும் பழிக்கக்கூடிய தன்மை ஏற்படும். 4 ஆம் இடத்தில் குரு மங்கள யோகம் ஏற்படக்கூடிய நிலையில், குரு செவ்வாயின் மூலமாக அம்மா, நிலம், காடு, பண்ணை, தோப்பு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

தொழிலில் ஜாக்பாட்

தொழில் அற்புதமாக இருக்கும். எல்லாவற்றிலும் தைரியமாக நின்று ஜெயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையில் சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நர்ஸ், மருத்துவர், மெடிக்கல் ஷாப், லாப் போன்றவை வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

காதலில் வெற்றி

11 இல் சனி, 12 இல் குரு தொடர்பு, 7, 12 க்கு உடையவர் சுபத்துவமாக இருப்பதால் கணவனால் லாபம், மனைவியால் லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய காதல் அமையும். காதலில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. இளைஞர்களுக்கு நல்லவை கூடுதலாக நடக்கும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுக்கு வேலை, படிப்புக்காகச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விசா, பாஸ்போர்ட் கிடைக்கும்.

பணவரவு கொட்டும்

ராகு கேது 9, 3இல் மாறுவதால் பூர்வீகத்துக்கு திரும்பி வராலம் என்று நினைப்பவர்களுக்கு சிறு சங்கடங்களைக் கொடுக்கும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவர்களுக்கு அங்கேயே இருக்கும் அமைப்பைக் கொடுக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் பாதிப்புகளைக் கொடுக்கும். தந்தை நம் பேச்சை கேட்காமல் இருப்பது, ஏதாவது மன வருத்தம் ஏற்படுவது, ஆரோக்கிய குறைபாடு, பொருளாதாதப் பிரச்சனைகள் என ஏதாவதொரு வகையில் சிறு சிறு பாதிப்புகள் வரும். எதிர்பாராத தன வரவு, பண வரவுகள் உண்டு.

வருமானம்

6, 12 ஆம் இடம் சுபத்துவமாக இருப்பதால் கடனை அடைக்கும் அளவுக்கு வருமானம் ஏற்படும். சிலருக்கு வளர்ச்சிக்கான கடன் கிடைக்கும். வீட்டுக் கடன் அடைவதற்கான யோகம் உண்டாகும். சிலருக்கு ஹவுசிங் லோன் கிடைக்கும். வண்டியை மாற்றுவது போன்ற யோகம் உண்டு. சிலருக்கு நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். நட்புகளால் நல்ல நன்மைகள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+