தொழிலில் கொட்டும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும் யோகம் பெறும் விருச்சிக ராசி

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-viruchigam-rasi-people-get

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசியினருக்கு ராசிநாதன் மங்கள யோகத்தில் குருவோடு சேர்ந்திருப்பது நல்ல அமைப்பாகும். 10 ஆம் இடத்தில் செவ்வாய், குரு சேர்ந்திருப்பது, கேதுவும் கேள யோகத்தில் இருப்பது மிக யோகமான அமைப்பாகும். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ராகுவும், கேதுவும் 3, 9 ஆம் இடத்திற்கு வருவது நல்ல அமைப்பு. அம்மாவின் மேல் இருந்து வந்த கோபங்கள் குறையும்.

தொழிலில் மேன்மை

தாயிடம் இருந்து அனுசரணை, ஆதரவு கிடைக்கும். வீடு கட்டுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பாதி நிலையில் இருக்கும் வீடுகளை கட்டி முடிப்பீர்கள். பிளாட் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பேச்சு மூலமாக தொழில் செய்பவர்கள், ஆசிரியர்கள், பரத நாட்டிய கலைஞர்கள், குருமார்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வழக்கறிஞர் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

முன்னேற்றம்

அடுத்து வரும் சனிப்பெயர்ச்சியில் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்துக்கு சனி பகவான் செல்கிறார். 5, 6 வருடங்களுக்கு உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரிய நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தைரியமாக எல்லா காரியங்களையும் எடுத்துச் செய்வீர்கள். வேலை போனாலும் கவலைப்படத் தேவையில்லை. நல்ல வேலை கிடைக்கும்.

தொழில் தொடங்கும் யோகம்

புதிய தொழில் தொடங்கினால் யோகம் உண்டு. கூட்டுத் தொழில் செய்வதற்கான அமைப்பு. வேலையில் இருந்துகொண்டே தொழிலை ஆரம்பிக்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயத்தை நம்பி செய்யலாம். ஒரே ஒரு ஆட்டோ, கார் வைத்திருப்பவர்கள் இன்னொரு வாகனத்தை வாங்கலாம். அதிர்ஷ்டம் பக்கத்தில் இருப்பதை தெரிந்து கொள்ளக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

மகிழ்ச்சி

பெண்களுக்கு சிறு சிறு செலவுகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான சொகுசு பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கட்டில், ஏசி, மெத்தை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி தொட்டது துலங்கக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+