மேஷ ராசிக்கு சொல்லி அடிக்கும் யோகங்கள்.. அடுத்த 30 நாட்களில் ஏற்படப் போகும் மாற்றம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மேஷம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசி மற்றும் மேஷம் லக்னத்தினருக்கு உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 8 ஆம் இடத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். 21 ஆம் தேதிக்கு பிறகு அவர் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் குரு பார்வை இருக்கிறது. குரு 19 ஆம் தேதிக்கு பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அப்போதும் உங்களுக்கு நல்ல நிலையில் தான் இருக்கும்.
பெயர் புகழ்
தனுசு ராசியில் எந்த கிரகங்கள் இருந்தாலும் தோஷம் இல்லை. அங்கு உங்கள் ராசி அதிபதி இருப்பதால் கடவுளின் பரி பூரண அருளை பெற போகிறீர்கள். இந்த மாதம் முழுவதுமே சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும். இந்த மாதம் முழுவதுமே நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். பெயர், புகழ் அதிகரிக்கும்.
பொருளாதாரம்
சுக்கிரன் எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் விபரீத ராஜ யோகம் கிடைக்கும். பொருளாதாரம் ஏற்றம் அடையும். பங்குச்சந்தை, சீட்டு, எம்.எல்.எம், பிட் காயின் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் இழந்த செல்வங்களை மீட்டெடுக்கும் காலம் இது. பொருளாதாரம், பணம் கொடுக்கல் வாங்கல் சார்ந்த விஷயங்களை 10 ஆம் தேதிக்கு முன்னதாக திட்டமிட்டுக் கொள்ளவும்.
ராஜயோகம்
புதன் பகவான் மூலம் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் கிடைக்கும். கடன் சுமை குறையும். பழைய பாக்கி வசூலாகும். சுப காரிய தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராசி அதிபதி நல்ல நிலையில் இருப்பதால் நற்பலன்கள் அதிகம் பெறுவீர்கள்.
கவனம்
மனதில் கவலை ரேகைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அலைச்சல் இருக்கும். காரியங்கள் நிறைவேறினாலும் சின்ன சின்ன தடைகள் இருக்கும். பழக்க வழக்கங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையீட வேண்டாம். பயணங்களின் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். கற்பக விநாயகர் வழிபாடு எல்லாவற்றிலும் வெற்றியை தேடி தரும்.












Click it and Unblock the Notifications